Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் கீர்த்தி ஷெட்டி? ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படம்.. மிஸ்கின்...

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் கீர்த்தி ஷெட்டி? ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படம்.. மிஸ்கின் உதவியாளர் தான் இயக்குனராம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் உச்சத்தை தொட்ட ஜெயம் ரவி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் அகிலன் திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இதனால் மனம் உடைந்துள்ள ஜெயம் ரவி, மீண்டும் வெற்றி படங்களை கொடுக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதன் பிறகு அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள ஜெயம் ரவி தற்போது போராடி வருகிறார். மனிதன் படத்தை இயக்கிய அஹ்மத் இயக்கத்தில் இறைவன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து முடித்து விட்டார். இந்தப் படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நடிக்கும் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகனுடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்குநர் மிஸ்கினின் உதவியாளரான புவனேஷ் அர்ஜூனன் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ஜீனி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

- Advertisement -

இந்த நிலையில் ஜீனி படம் ஃபேண்டஸி ஜானரில் உருவாக உள்ளதாகவும், வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த படத்தில் நாயகியாக நடிக்க தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Most Popular