Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainment"அடி போலி சேச்சி"… ஆர்யா, கௌதம் கார்த்திக்குடன் கூட்டு சேரும் மலையாள நடிகை மஞ்சுவாரியார்… எதுக்காக...

“அடி போலி சேச்சி”… ஆர்யா, கௌதம் கார்த்திக்குடன் கூட்டு சேரும் மலையாள நடிகை மஞ்சுவாரியார்… எதுக்காக தெரியுமா?

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் எப்.ஐ.ஆர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். விஷ்ணு விஷால் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் எப் ஐ ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் அடுத்ததாக, மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படம், தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு சிறிய வீடியோவுடன் வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
பிரின்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் படத்தின் பூஜை நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பான் இந்தியா படமாக இது உருவாக இருப்பதால், அனைத்து மொழியிலும் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்திலிருந்து புதிய தகவலாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் இணைந்துள்ளார்.

- Advertisement -

அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சு வாரியர், ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். தொடர்ந்து துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து சாகச காட்சிகளில் நடித்த மஞ்சுவாரியருக்கு பலருக்கு தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் தற்போது ஆர்யா கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் மஞ்சுவாரியர் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

Most Popular