Thursday, April 25, 2024
- Advertisement -
HomeEntertainment”விமானம்” மூலம் தமிழில் ரீ என்ட்ரி.. பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. போஸ்டருடன் வந்த...

”விமானம்” மூலம் தமிழில் ரீ என்ட்ரி.. பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. போஸ்டருடன் வந்த மகிழ்ச்சி செய்தி!

கேராளவை பூர்வீகமாகக்கொண்ட நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானதால், ஏகப்பட்ட வாய்ப்புகள் மீரா ஜாஸ்மினுக்கு குவிந்தன. குறிப்பாக அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.

- Advertisement -

தொடர்ந்து மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டகோழி படம் காரணமாக படத்தில் மீரா ஜாஸ்மினின் துறுதுறு நடிப்புக்கு பலர் ரசிகர்களாக மாறினார்கள். சண்டகோழி 2 உருவானபோதுகூட மீரா ஜாஸ்மினை ரசிகர்கள் அதிகம் மிஸ் செய்தனர். கிட்டத்தட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த கதாபாத்திரமும் மீரா ஜாஸ்மின் கதாபாத்திரத்தின் சாயலிலேயே உருவாகியது.
இதனையடுத்து அவர் பல மொழிகளில் நடித்துக்கொண்டிருந்த மீரா ஜாஸ்மினுக்கு தமிழில் அடுத்த பிரேக் கொடுத்த படம் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து. அதில் மாதவனின் மனைவியாக நடிப்பில் அதகளம் செய்திருப்பார். தொடர்ந்து மிகப்பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர், கடைசியாக 2014ம் ஆண்டு வெளியான விஞ்ஞானி படத்தில் நடித்துவிட்டு தமிழ் திரையுலகிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

தமிழ் திரையுலகிலிருந்து ஒதுங்கினாலும் மலையாளத்தில் அவ்வப்போது நடித்து வந்தார். ஒருகட்டத்தில் அதிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்தார். தற்போது மீரா ஜாஸ்மின் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். அதன்படி பல படங்களில் கமிட்டாகிவரும் மீரா ஜாஸ்மின் தனது புகைப்படங்களையும் அதிகம் பகிர்ந்துவருகிறார். எப்போதும் ஹோம்லியாகவே நடித்து வந்த மீரா ஜாஸ்மின், இம்முறை கவர்ச்சிக்கும் தயார் என்று புகைப்படங்கள் மூலம் அறிவித்தார். 

இதன் காரணமாக நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மீரா ஜாஸ்மினின் பிறந்தாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘விமானம்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடர உள்ளதாகவும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Most Popular