Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentதனுஷ் இயக்கத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்.. எந்த படத்தில் தெரியுமா?.. வெளியான சர்ப்ரைஸ்

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்.. எந்த படத்தில் தெரியுமா?.. வெளியான சர்ப்ரைஸ்

நடிகர் தனுஷ் எழுத்து, இயக்கம், கதை, திரைக்கதை, பாடகர், தயாரிப்பு என்று பன்முகத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தனது 50வது படமான ”ராயன்” படத்தை இயக்கி முடித்துள்ள நடிகர் தனுஷ், அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்து வந்தார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த படத்தை சம்மருக்கு ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த படத்திற்கு பின் நடிகர் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ”குபேரா” படத்தில் நடித்து வருகிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக நாகர்ஜுனாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் முழுமையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

”நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் மற்றும் தனது அக்கா மகன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். கல்லூரி கால காதல் கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

- Advertisement -

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். என்ன தோற்றத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

- Advertisement -

பிரியங்கா மோகனுடன் ஏற்கனவே நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்திருந்தார். அப்போது பிரியங்கா மோகனின் ஒத்துழைப்பு காரணமாகவே தனுஷ் இந்த படத்தில் நடிக்க அணுகியதாக தெரிய வந்துள்ளது. ஜெயம் ரவியுடனான பிரதர் படத்தில் மட்டுமே பிரியங்கா மோகன் தமிழில் நடித்து வந்தார். மற்றபடி தெலுங்கில் எண்ணற்ற படங்களில் நடித்து வருகிறார். இதனால் மீண்டும் பிரியங்கா மோகன் தமிழ் பக்கம் திரும்பியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Most Popular