Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாபிரபல நடிகை ராஷ்மிகாவின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து.. நடந்தது என்ன...?

பிரபல நடிகை ராஷ்மிகாவின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து.. நடந்தது என்ன…?

தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஸ்மிகா. இவர் கடைசியாக நடித்த அனிமல் திரைப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

- Advertisement -

பல பிரபலங்களே அந்த திரைப்படத்தை மோசமாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது .ஆனால் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் ஏறத்தாழ 900 கோடிக்கு மேல் வசூலை பெற்றது. இதன் காரணத்தினால் நடிகை ராஷ்மிகாவிற்கு ஹிந்தியில் பல ரசிகர்கள் குவிந்து விட்டார்கள் .அதேசமயம் சமீபத்தில் நடிகை ராஸ்மிகாவை கவர்ச்சியாக்கி ஒரு பேக் வீடியோவை வெளியிட்டார்கள். அதற்கு ரசிகர்கள் பெரும் அளவில் கண்டனம் தெரிவித்தார்கள்.

ஆனால் அவருக்காக வாதம் செய்தவர்களுக்கெல்லாம் முகத்தில் கரியை பூசியது போல் அனிமல் திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் நடிகை ராஸ்மிகா.

- Advertisement -

தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்திலிருந்து அறிமுகமான நடிகை ராஷ்மிகா புஷ்பா திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார். இப்பொழுது அனிமல் திரைப்படத்தை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ,தி கேர்ள் பிரண்ட் சாவா, ரெயின்போ என்று தமிழ், தெலுங்கு ;ஹிந்தி போன்ற மொழிகளில் அடுத்தடுத்த திரைப்படங்களை நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்பொழுது நடிகை ராஷ்மிகா ஸ்ரதா தாஸுயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் அதில் மரணத்திலிருந்து தப்பித்திருக்கிறேன் என்று பதிவையும் பதிவிட்டு இருக்கிறார். ஏன் இவ்வாறு பதிவை பதிவிட்டு இருக்கிறார் ராஷ்மிகா என்று ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள் .

நடிகை ராஷ்மிகா மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்ய இருந்திருக்கிறார் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏதோ கோளாறு இருப்பது போன்று தெரிய வந்திருக்கிறது.

இதனால் சாமர்த்தியமாக விமான ஓட்டுநர்கள் மும்பையில் விமானத்தை தரையிறக்கினார்கள் .அதனால் எந்த ஆபத்தும் நேராமல் அதிர்ஷ்டவசமாக எல்லா பயணிகளும் பாதுகாக்கப்பட்டனர். அந்த பயணிகளில் ஒருவராக இருந்த நடிகை ராஷ்மிகா மரணத் தருவாய்க்கு சென்று வந்ததாக கூறி தன்னுடைய இந்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

Most Popular