Entertainment

“அதிர்ஷ்டசாலி” இப்படி ஒரு காதலன் கிடைக்க.. காதலர் தினத்தன்று உருகிய ஸ்ருதிஹாசன்.. வாழ்த்தும் ரசிகர்கள்!

வாரிசு நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழில் ஏழாம் அறிவு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரம், குழந்தை பாடகி என தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு சினிமாவின் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். அண்மைக் காலமாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் முதலில் வெளிநாட்டினரான மைக்கேல் கார்சலேவை காதலித்து வந்த நிலையில், இருவரும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா கமல்ஹாசனிடமே தனது காதலரை வேட்டி சட்டையை அணிவித்து அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரேக்கப் ஆனது. இந்த நிலையில், அடுத்ததாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

கவுஹாத்தியில் பிறந்து வளர்ந்த சாந்தனு ஹசாரிகா இன்ஜினியரிங் படிக்க சென்னை வந்த நிலையில், இங்கே உள்ள கோயில்கள், சிற்பங்களை எல்லாம் பார்த்து தனக்கு இன்ஜினியரிங்கில் ஆர்வம் இல்லை என்பதையும் இலுஸ்ட்ரேட் ஆர்ட்டிஸ்ட்டாக ஆகத்தான் விருப்பம் என்பதை புரிந்து கொண்டு அப்படியொரு கலைஞராக மாறிய அவர், தற்போது இசைக் கலையில் சிறந்து விளங்கும் ஸ்ருதிஹாசன் உடன் காதலில் விழுந்தார்.

நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா லாக்டவுன் சமயத்தில் ஒரே வீட்டில் லிவிங் டுகெதராக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் படு நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர். நடிகை நயன்தாரா காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஸ்ருதிஹாசன் திருமணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே காதலர் தினமான இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், காதலனுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோ ஒன்றை வெளியிட்டு ள்ளார். அதோடு, நீ தான் சிறந்தவன், நீ எப்போதும் என் நினைவில் இருப்பாய். உன்னை போல் ஒருவன் கிடைத்ததற்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top