Entertainment

விஜய் வர்மாவுடன் காதலா? இன்னும் எத்தனை முறை தான் பதில் சொல்லுவது.. சலித்துக் கொண்ட தமன்னா..!

முன்னணி நடிகையான தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சீனியர் நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இவரும் பாலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக பரவி வரும் வதந்திகள் பரவியது. நடிகை தமன்னா கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் கலந்துக் கொண்டார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி ட்ரெண்டானது.

Advertisement

இதனால், விஜய் வர்மாவும் தமன்னாவும் டேட்டிங்கில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது. அதற்கு ஏற்க இருவரும் இணைந்து பல்வேறு விருது விழாக்களில் கலந்துகொண்டனர். இதனால் ரசிகர்கள் உண்மையாகவே தமன்னா – விஜய் வர்மா இணை காதலிப்பதாக நினைத்தனர்.

இந்த நிலையில் நடிகை தமன்னா காதல் தொடர்பாக மனம் திறந்துள்ளார்.அதில், நடிகர் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் தான் நான் நடித்திருக்கிறேன். அதற்குள் அவருடன் காதல், டேட்டிங் என்று செய்திகள் பரவி வருகிறது. இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். இருந்தாலும், இது போன்ற வதந்திகளை பார்க்கும் போது சற்று வருத்தமாகவே இருக்கிறது.

சினிமாவில் மட்டும் நடிகர்களை விடவும் நடிகைகளே அதிக திருமண வதந்திகளில் சிக்குகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதும் எனக்கு சரியாக தெரியவில்லை. எனக்கு திருமணம் நடப்பதற்கு முன்பே, டாக்டர், தொழிலதிபர் என பலருடன் பலமுறை எனக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள். எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா? எனத் தெரியவில்லை என்று வதந்தியால் நான் பாதிக்கப்பட்டது குறித்து பேசினார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top