Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் இணைந்த அடங்க மறு கூட்டணி.. 5 ஆண்டுகளாக படம் கிடைக்காமல் தவித்த இயக்குநர்.. மாமியார்...

மீண்டும் இணைந்த அடங்க மறு கூட்டணி.. 5 ஆண்டுகளாக படம் கிடைக்காமல் தவித்த இயக்குநர்.. மாமியார் நிறுவனத்திற்கு நடித்து கொடுக்கும் ஜெயம் ரவி

5 ஆண்டுகளுக்கு முன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்ற படம் அடங்க மறு. ஜெயம் ரவி, ராஷி கண்ணா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர். மாரி 2, கேஜிஎஃப் 1 உள்ளிட்ட படங்களுடன் வெளியாகியும், பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கி இருந்தார்.

- Advertisement -

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் தட்டிக் கேட்ட போலீஸ்காரரின் குடும்பத்தினரையும் கொலை செய்யும் வில்லன்களை ஒவ்வொருவராக தேடி தேடி அவர்களின் தந்தை மூலமாக ரிவென்ஜ் எடுக்கும் கதை ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது. அந்த படத்தில் தேவையின்றி கூடுதலாக ஒரு பாடலோ அல்லது ஒரு காட்சியோ கூட இருக்காது. 

இதனால் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் பெரிய இயக்குநராக வருவார் என்று பாராட்டப்பட்டது. ஆனால் அடங்க மறு படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்தும் கார்த்தி தங்கவேல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இடை இடையே நடிகர் விஷாலுக்கு கதை கூறியிருப்பதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைய உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த படத்தையும் ஜெயம் ரவியின் மாமியார் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ஜெயம் ரவியின் அடங்க மறு, பூமி மற்றும் சைரன் படங்களை இதே நிறுவனம் தான் தயாரித்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு பின் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே கார்த்திக் தங்கவேல் படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகளை முழுமையாக முடிக்கவுள்ளார். அடங்க மறு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், அதேபோல் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular