ஜெய் பீம் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது, கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதன் அறிவிப்பு வெளியாகி, தொடர்ந்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை, யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் ஆகிய இரு நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. சூர்யா நடித்துள்ள திரைப்படங்களிலேயே, மிகப்பெரிய பொருட்செலவில் கங்குவா சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதில் திஷா பாண்டே, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சதுரங்க வேட்டை நட்டி, ஜெகபதி பாபு ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன் ஜென்ம பிறவிக்கும், தற்போதைய காலத்தையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இதன் படப்பிடிப்பை கொடைக்கானலில் அடர்ந்த வனப் பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் சூட்டிங் நடைபெறுகிறது. சமீபத்தில் வெளியான கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஆக்ரோஷமான குரலுடன் சூர்யா, நலமா என விசாரிக்கும் வசனம், இணையத்தில் ட்ரெண்டானது.
இந்தப் படத்தில் சூர்யாவின் போர்ஷன், அக்டோபர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எடுத்து வாடி வாசலில் அவர் நடிக்கப் போகிறார் என்று எல்லாரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக சுதா கொங்கரா உடன் கூட்டணி அமைத்திருக்கிறார் சூர்யா. இந்த திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புதிய தகவலாக, சூர்யா 43 வது படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி, விருமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாக்கு ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே கார்த்தியுடன் காதல் ததும்ப ததும்ப நடித்து ரசிகர்களை மனதை கொள்ளையடித்தார் அதிதி சங்கர். இதையடுத்து, மாவீரன் திரைப்படத்தில் நடித்து பலரையும் அதிதி கவனிக்க வைத்தார். இது போக திரைப்படங்களில் பாடல்கள் பாடியும் அவர் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர், சூர்யா படத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.