Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஅட்லீ, விஷ்ணுவர்தனை தொடர்ந்து.. பாலிவுட் பறந்த பாலாஜி மோகன்.. மாஸ் கம்பேக்கை கொடுத்த மாரி பட...

அட்லீ, விஷ்ணுவர்தனை தொடர்ந்து.. பாலிவுட் பறந்த பாலாஜி மோகன்.. மாஸ் கம்பேக்கை கொடுத்த மாரி பட இயக்குநர்!

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இயக்குநர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் இருந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய கபீர் சிங், அனிமல் படங்கள் அதிரி புதிரி ஹிட்டடித்தது. அதேபோல் ஜெர்சி படத்தின் இயக்குநர் மீண்டும் ஜெர்சி பெயரில் இயக்கினார்.

- Advertisement -

அதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஷேர்ஷா திரைப்படம் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் தற்போது சல்மான் கானை வைத்து ”தி புல்” என்ற படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு பாதியில் தொடங்கவுள்ளது. அதேபோல் ஷாரூக் கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தது.

இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குநர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது அட்லீ, விஷ்ணுவர்தன் ஆகியோரை தொடர்ந்து மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனும் பாலிவுட்டில் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். இவர் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

- Advertisement -

அதன்பின் மண்டேலா படத்தை தயாரித்த பாலாஜி மோகன், நீண்ட நாட்களாக அமைதி காத்து வந்தார். இதனிடையே நீண்ட கால தோழியான தான்யா பாலகிருஷ்ணனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மீண்டும் தனுஷுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பாலிவுட் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

- Advertisement -

சயீஃப் அலி கானை வைத்து ”கிளிக் சங்கர்” என்ற படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஸ்கேம் 1992 வெல் தொடருக்கு வசனம் எழுதிய கரண் வியாஸ் வசனம் எழுதுகிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்த படம், சயீஃப் அலி கானுக்கு பெயர் சொல்லும் படமாகவும், அவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் படமாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.

Most Popular