Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentஜில்லா இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்… கதி கலங்கி போய் நிற்கும் தளபதி ரசிகர்கள்

ஜில்லா இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்… கதி கலங்கி போய் நிற்கும் தளபதி ரசிகர்கள்

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தத் திரைப்படத்தை, லலித் குமார் தயாரிக்கிறார். இதில், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் தலக்கோணம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

- Advertisement -

சமீபத்தில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, லியோ படத்திலிருந்து நா ரெடி தான் பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. ஏராளமான ரசிகர்களின் ரிங்டோன் ஆகவும் இந்த பாடல் மாறியது. இதைத்தொடர்ந்து சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, அவர் ஆண்டனி தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து வரும் 15ஆம் தேதி அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இதில் முதல் பாகமே தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், இரண்டாம் பாகத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு, வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கதையில்லாமல் முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இது உருவாகிறது.

- Advertisement -

இந்த படத்தைத் தொடர்ந்து, ஜில்லா பட இயக்குனர் நேசனுடன் விஜய் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்பிறகே அவர் லியோ 2 வில் நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் ஒரு படம் மற்றும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

இதன் பிறகே, லியோ 2 க்கான வேலைகள் ஆரம்பம் ஆகும் என்று தெரிகிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், ஜில்லா இயக்குனருடன் விஜய் மீண்டும் இணைய போவதாக வெளியாகி உள்ள செய்தியை ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். விஜய் வேறு ஒரு இயக்குனருடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular