Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentகலரை கேட்டா கழட்டனும்… சைஸ கேட்டா காட்டணும்! ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளியான 'ஃபர்ஹானா' டீசர்!

கலரை கேட்டா கழட்டனும்… சைஸ கேட்டா காட்டணும்! ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளியான ‘ஃபர்ஹானா’ டீசர்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஃபர்ஹானா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றவர் நெல்சன் வெங்கடேசன். தற்போது இவர் இயக்கியிருக்கும் படம்தான் ஃபர்ஹானா. இந்த படத்தில் கதாநாயகியாகவும், முதன்மை கதாபாத்திரத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார்.

- Advertisement -

இஸ்லாமிய பெண்ணாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை மையப்படுத்திதான் ஃபர்ஹானா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை, இந்த படத்திலும் அதேபோன்ற கதாபாத்திரத்தில்தான் வருகிறார்.

ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமல்லாமல் இயக்குநர் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையுடன் படத்தின் அனைத்து பாடல்களும் மெருகேற்றுகின்றன. பிரபல கவிஞர் மனுஷ்ய புத்திரன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

- Advertisement -

படத்தின் அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மே 12ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கா முட்டை, லட்சுமி படங்களுக்கு பின்னர் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Most Popular