Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாதிருமணத்திற்கு பிறகும் , “ சதா சூப்பர் பிகர் ” எனச் சொன்ன அஜித்.. ...

திருமணத்திற்கு பிறகும் , “ சதா சூப்பர் பிகர் ” எனச் சொன்ன அஜித்.. “ எனக்கும் அஜித் மேல் கிரஷ் ” என ஓப்பனாக பேசியுள்ள சதா – வீடியோ இணைப்பு.. !

முன்னணி தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான சதா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அஜித்குமாரின் மேல் தனக்கு கிரஷ் இருந்ததாக கூறினார். இருவரும் பேரரசு இயக்கிய திருப்பதி படத்தில் இணைந்து நடித்தனர்.

- Advertisement -

தமிழில் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமாகினார் சதா. அதன்பிறகு ஷங்கரின் அந்நியன், உன்னாலே உன்னாலே, எதிரி, பிரியசகி ஆகிய பல படங்களில் காணப்பட்டார். மேலும் தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் கடைசியாக டார்ச் லைட் எனும் படத்தில் தென்பட்டார். பிறகு வாய்ப்புகள் இல்லாமால் நிகழ்ச்சிகளில் நடுவராக இணைந்தார். ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்து இருந்த சதா, அஜித்குமாருடன் இணைந்து நடித்த தருணதைப் பற்றி பகிர்ந்தார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ எனக்கு அஜித் சார் என்றால் ரொம்ப பிடிக்கும். இதைச் சொல்லலாமா இல்லையா என்றுக் கூட எனக்குத் தெரியவில்லை. திருப்பதி படத்தின் போது எனக்கு அவர் மேல் ஒரு கிரஷ் இருந்தது என்று கூட சொல்லலாம். ” என்றார். உடனே அங்கு கூடியிருந்த அனைவரும் வியப்பில் ஓஓஓ போட்டனர்.

- Advertisement -

இது சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு இணங்க மற்றொரு நேர்காணல் வீடியோவும் அஜித் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. திருப்பதி படத்தில் நடித்த மற்றொரு நடிகரான பெஞ்சமின் கூறியதாவது, “ அஜித் சார் விஜய்க்கு அப்படியே எதிர்மாறாக இருப்பார். செட்டில் மிகவும் கலகலப்பாக காமெடி செய்து ஜாலியாக இருப்பார். ”

“ ஒருமுறை திருப்பதி படத்தின் ஷூட்டிங்கில் நடிகை சதாவைக் கைக்காட்டி என்னிடம், அங்கே பார் சூப்பர் பிகர் வருகிறது என்றார். நான் உடனே, என்ன சார் கதாநாயகியைப் பார்த்து இப்படி எனக் கேட்டேன். அவர் அதற்க்கு, ஏன் அப்போ அது பிகர் இல்லையா என நகைச்சுவையாக பேசினார். ” என்றார் நடிகர் பெஞ்சமின்.

Most Popular