Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாஅவரோட அந்த மனசு தான் …. பிரபல வாரிசு நடிகரின் திரை வாழ்க்கையை மாற்றி அமைத்த...

அவரோட அந்த மனசு தான் …. பிரபல வாரிசு நடிகரின் திரை வாழ்க்கையை மாற்றி அமைத்த சம்பவம்! – தல அஜித் செய்த உதவி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகனாக இருப்பவர் அஜித் குமார் . இவரது 62 ஆவது திரைப்படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிறது . இதனைத் தொடர்ந்து அதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த நான்கு மாத காலமாக ஏகே 62 திரைப்படத்திற்கான அறிவிப்புகளை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் . அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு லைக்கா நிறுவனம் திரைப்படத்திற்கான பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு தீர்வு கிடைத்திருக்கிறது .

- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பின்னர் அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மகிழ்ந்திருமேனி இயக்குனராக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தினைப் பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார் . அதனைத் தொடர்ந்து மே மாதம் அஜித் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி அந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . தல நடிக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்திருக்கின்றனர் . இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டைட்டிலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . மேலும் அந்த டைட்டிலைட் டி கோட் செய்து அதிலிருந்து கதை பற்றிய ஏதேனும் விவரங்கள் இருக்குமா என அலசி ஆராய்ந்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள் .

அஜித் குமார் எல்லோருக்கும் உதவும் மனம் படைத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே . வலது கைக்கு செய்யும் உதவி இடது கைக்கு தெரிய கூடாது என்பது போல் தான் செய்யும் உதவிகள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்பவர் தற்போது இவரைப் பற்றிய ஒரு செய்தி தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது . தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய் . தற்போது இவர் பாலா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்

- Advertisement -

இவர் தனது சினிமா வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் என்பது நாம் அறிந்ததே தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராகவே அறிமுகமானாலும் ராசி இல்லாத நடிகர் என ஒதுக்கப்பட்டு பல்வேறு அவமானங்களுக்கும் பலானவர் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது . அதன் பிறகு கிடைத்த வாய்ப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஒரு உயரத்தை அடைந்திருக்கிறார் என்றால் அது மறுக்க முடியாது

- Advertisement -

அருண் விஜய்க்கு மிகப்பெரிய கம்பேக் அவர் வில்லனாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தான் கிடைத்தது அந்தத் திரைப்படத்தில் அவர் நடித்த விக்டர் கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்ததோடு அடுத்தடுத்து வெற்றி படங்கள் கிடைக்கவும் மீண்டும் கதாநாயகனாக மாறவும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது . என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் கதாபாத்திரத்திற்கு அருண் விஜய் பெயரை பரிந்துரை செய்தவர் அஜித் குமார் தான் என்ற உண்மை தற்போது வெளியாகியிருக்கிறது . இந்தத் திரைப்படத்தில் அவர்தான் நடிக்க வேண்டும் என்றும் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனவும் கௌதம் மேனனுக்கு பரிந்துரை செய்திருக்கிறார் அஜித் . அதனைத் தொடர்ந்து அவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் கௌதம் மேனனும் சம்மதித்து அருண் விஜயை நடிக்க வைத்திருக்கிறார் . அந்தத் திரைப்படம் அருண் விஜய் சினிமா கேரியரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை பிரபல சினிமா பத்திரிகையாளரான அனந்தனன் தெரிவித்திருக்கிறார்

Most Popular