Saturday, September 14, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய்யுடன் உறுதியான திரைப்படம்... வெங்கட் பிரபுவுக்கு முதல் ஆளாக செல்போனில் வாழ்த்துக் கூறிய ஏ.கே... இவர்தான்யா...

விஜய்யுடன் உறுதியான திரைப்படம்… வெங்கட் பிரபுவுக்கு முதல் ஆளாக செல்போனில் வாழ்த்துக் கூறிய ஏ.கே… இவர்தான்யா உண்மையான ஜென்டில்மேன்!

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தில், அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர

- Advertisement -

இதன் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ திரைப்படத்திலிருந்து நா ரெடி பாடல் வெளியானது. அனிருத் இசையில் இந்த பாடல் நல்ல ரீச் ஆக, இளைஞர்கள் தங்கள் ரிங்டோனாக அதனை மாற்றினர். இதைத்தொடர்ந்து, சஞ்சய் தத் பிறந்தநாளில் படக்குழு அடுத்த அப்டேட்டை வெளியிட்டது. இதில் அவர் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வரும் 15ஆம் தேதி, அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் இரண்டு பாகம் உருவாக இருப்பதாகவும், இதில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார்.

- Advertisement -
thala

தளபதி 68 ஆக உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு, விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா இணைந்து இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்துள்ள வெங்கட் பிரபு, விஜய் படம் உறுதியானதும் தனக்கு முதலில் செல்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித் குமார் தான் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெங்கட் பிரபு, அஜித்தின் 50-வது படமான மங்காத்தா திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைக் கண்டார்.

தொடர்ந்து அவருடன் மங்காத்தா படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக வெங்கட் பிரபு கூறி வருகிறார். இந்த நிலையில் விஜய் படத்துடன் இணைந்ததற்கு அஜித் முதல் முறையாக வாழ்த்து தெரிவித்தது, ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. என்னதான் அஜித் விஜய் சண்டையை இணையத்தில் ரசிகர்கள் செய்து வந்தாலும், இருவரும் நண்பர்கள்தான் என்றும், அதிலும் அஜித் பக்கா ஜென்டில்மேன் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

Most Popular