Saturday, November 2, 2024
- Advertisement -
HomeEntertainment13 ஆண்டுகளுக்கு பின் இரட்டை வேடங்களில் ஏகே.. விடாமுயற்சியில் தீவிரமான படக்குழு.. அஜர்பைஜானில் இருந்து வந்த...

13 ஆண்டுகளுக்கு பின் இரட்டை வேடங்களில் ஏகே.. விடாமுயற்சியில் தீவிரமான படக்குழு.. அஜர்பைஜானில் இருந்து வந்த அப்டேட்!

வலிமை படத்திற்கு பின் மீண்டும் அ.வினோத் இயக்கத்தில் மீண்டும் இணைந்தார் அஜித் குமார். பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பதாக இருந்த நிலையில், திடீரென கதை பிரச்சனை ஏற்பட்டதால், படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

- Advertisement -

இதன்பின் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் பிறந்தநாளன்று விடாமுயற்சி என்று தலைப்பிடப்பட்டு டைட்டில் லுக் வெளியிடப்பட்டது. இதனால் அஜித் குமார் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ஆனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இறுதிவரை தொடங்கப்படவில்லை. இதனால் அஜித் குமார் ரசிகரக்ள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பாகவே படக்குழுவினர் அசர்பைஜான் சென்றுள்ளனர். 

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் அஜித்குமார் ஜோடியாக நடிகை த்ரிஷா மற்றும் ரெஜினா இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை த்ரிஷா அசர்பைஜானில் இருப்பதை இன்ஸ்டாகிராம் மூலமாக பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் படத்தின் வில்லனாக நடிகர் ஆரவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

- Advertisement -

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்குமார் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயது அஜித்குமார் மற்றும் 40 வயது மிக்க அஜித் குமார் என்று இரு வேடங்களில் நடிக்கவுள்ளார். அதில் இளம் வயது அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். கடைசியாக அசல் படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular