Friday, December 6, 2024
- Advertisement -
HomeEntertainmentமகிழ் திருமேனிக்கு முன்பாகவே ஆதிக்கை அழைத்து பேசிய அஜித் குமார்.. தயாரிப்பாளரிடமும் சிபாரிசு செய்தாராம்!

மகிழ் திருமேனிக்கு முன்பாகவே ஆதிக்கை அழைத்து பேசிய அஜித் குமார்.. தயாரிப்பாளரிடமும் சிபாரிசு செய்தாராம்!

வழக்கமாக நடிகர் அஜித் குமார் ஒரு படத்தை முடித்து ரிலீஸ் செய்த பின்னரே அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார். அந்த வகையில் துணிவு படத்தை முடித்த பின், ”விடாமுயற்சி” படம் முடிவாவதற்கே 4 மாதங்களானது. இதன்பின் இயக்குநர் மகிழ் திருமேனி திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

- Advertisement -

இதையடுத்து படப்பிடிப்பை தொடங்குவதற்கு அக்டோபர் மாதம் வரை சென்றது. இதனால் லைகா நிறுவனம் மீதும் நடிகர் அஜித் குமார் கோபமடைந்தார். இருப்பினும் மகிழ் திருமேனியின் கதை பிடித்ததால், அஜித் குமார் முழு ஆதரவு கொடுத்தார். அஜர்பைஜானில் தொடங்கிய படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த, இன்னும் நீண்ட கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படாமல் உள்ளது.

அஜித் குமார் கொடுத்த கால்ஷீட் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதன்பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் உடனடியாக நடிக்கவுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் போதே ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய கதை பிடித்து போக, நடிகர் அஜித் குமார் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட போதே, ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதனிடையே லைகா நிறுவனம் மகிழ் திருமேனியை கொண்டு வந்ததால், உடனடியாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரனை அனுப்பி கதை கூறி அறிவுறுத்தியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் அதற்குள் மார்க் ஆண்டனி படத்தை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால், அவரின் கதையை கேட்டுள்ளது. அந்த கதை இன்னும் சிறப்பாக இருந்ததால், தயாரிப்பு நிறுவனம் உடனடியாக ஓகே கூறியுள்ளது.

- Advertisement -

இருந்தாலும் படத்தின் தலைப்பு மாற்றலாமா என்று கேட்ட போது, நடிகர் அஜித் குமார் உடனடியாக அந்த டைட்டிலே இருக்கட்டும் என்று கூறியுள்ளார். அஜித் குமாரின் கதாபாத்திரம் பாசிட்டிவ், நெகட்டிவ் தன்மையுடன் இருப்பதால், சரியான டைட்டில் அதுதான் என்று சிபாரிசும் செய்துள்ளார். அஜித் குமாரின் ஈடுபாடு காரணமாக பொங்கல் வெளியீடு என்று தயாரிப்பு நிறுவனம் தைரியமாக அறிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Most Popular