Sunday, April 6, 2025
- Advertisement -
HomeEntertainmentமறைந்த மாரிமுத்துவின் குழந்தைகளின் பள்ளி கல்விச்செலவை முழுமையாக பார்த்துக் கொண்ட அஜித்குமார்… நடிகரே நெகிழ்ச்சியுடன் கூறியதை...

மறைந்த மாரிமுத்துவின் குழந்தைகளின் பள்ளி கல்விச்செலவை முழுமையாக பார்த்துக் கொண்ட அஜித்குமார்… நடிகரே நெகிழ்ச்சியுடன் கூறியதை நினைவுபடுத்தும் ரசிகர்கள்

சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் கொடிகட்டி பறந்த நடிகர் மாரிமுத்து, திடீரென மறைந்தது திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு உதவியாளராக இருந்த மாரிமுத்து, அங்கிருந்து படிப்படியாக முன்னேறி பலராலும் அறியப்படும் முகமாக மாறினார். இயக்குனர் வசந்தின் நேருக்கு நேர் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

- Advertisement -

எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல்வேறு இயக்குனர்களிடமும் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். சிம்புவின் மன்மதன் திரைப்படம் பெரும் வெற்றி பெற அதில் இணை இயக்குனராகவும் மாரிமுத்து பணிபுரிந்தார். இதன் பிறகு, கண்ணும் கண்ணும் என்னும் திரைப்படத்தின் மூலம் மாரிமுத்துவின் இயக்குனர் ஆசை நிறைவேறியது. பிரசன்னா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நன்றாக இருந்தாலும், அன்றைய தேதியில் சரியான வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் வடிவேலுவின் காமெடி அந்தத் திரைப்படத்தில் களை கட்டியது. கிணற்றைக் காணும் என வடிவேலு அலப்பறை செய்யும் காமெடி அந்த திரைப்படம் தான். இதன் பிறகு புலிவால் என்னும் திரைப்படத்தையும் மாரிமுத்து இயக்கினார். மலையாளத்தின் ரீமேக்கான இந்தத் திரைப்படமும், மாரிமுத்துவுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இருப்பினும் தனது நடிப்பின் மூலம் வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வந்தார் மாரிமுத்து.

- Advertisement -

மிஷ்கினின் யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், எண்ணற்ற திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக பரியேறும் பெருமாள், கொம்பன், மருது, ஜீவா உள்ளிட்ட 50 திரைப்படங்களில் அவர் நடித்தார். இது போக சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலிலும் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல்களை பெற்றார் மாரிமுத்து. அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் திரள, ஆதி குணசேகரனை பெண்களும் கொண்டாடினர். இந்த நிலையில் இன்று டப்பிங் பணியில் இருந்த அவர், மாரடைப்பு காரணமாக வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

- Advertisement -

அவரது உடலுக்கு திரை உலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு அவர் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மாரிமுத்து பேசிய காணொளி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், தனது குழந்தைகளின் படிப்பு செலவை நடிகர் அஜித் குமார்தான் செய்ததாக கூறியுள்ளார். தனது மகன் கல்வி செலவிற்காக அஜித்திடம் கேட்டபோது அவர் உடனடியாக உதவியதாகவும், எனது மகனின் பத்தாம் வகுப்பு வரை முழு கல்வி செலவை அஜித் குமார் தான் பார்த்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular