Thursday, November 21, 2024
- Advertisement -
HomeEntertainmentவிடாமுயற்சி ரிலீஸ் எப்போது? அஜித் குமார் விபத்து வீடியோவை வெளியிட்டது ஏன்? ஓபனாக சொன்ன சுரேஷ்...

விடாமுயற்சி ரிலீஸ் எப்போது? அஜித் குமார் விபத்து வீடியோவை வெளியிட்டது ஏன்? ஓபனாக சொன்ன சுரேஷ் சந்திரா

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. தடையறத் தாக்க, தடம், மீகாமன், கலக தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். கடந்த மே மாதமே படத்தின் அறிவிப்பு வெளியாகிய நிலையில், அக்டோபர் மாதத்தில் தான் படப்பிடிப்பு தொடங்கியது.

- Advertisement -

படத்தின் கதை வெளிநாட்டில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளதால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது. இந்த படத்தின் அப்டேட் குறித்த வெளியாகாத நிலையில், நடிகர் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி என்று படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித் குமாரின் மேனேஜரான சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோவிற்கு கீழ் கடந்த நவம்பரில் நடைபெற்ற விபத்து என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 4 மாதங்களுக்கு முன் நடந்த விபத்தின் வீடியோவை தற்போது வெளியிடுவதன் நோக்கம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

இதற்கு சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், கடந்த நவம்பர் மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித் குமார் காரில் சேஸ் செய்து கொண்டு வில்லனை தடுத்து நிறுத்தும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது கார் கட்டுப்பாட்டை மீறி கீழ் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோதே உதவியாளர்கள் என்னிடம் விபத்து குறித்து பேசியதும் அதிர்ச்சியடைந்தேன்.

- Advertisement -

அதன்பின் மருத்துவமனை பரிசோதனையில் அஜித் குமாருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிய வந்தது. பின்னர் உடனடியாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. மீண்டும் ஷூட்டிங் தொடங்க அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிந்த அடுத்த நாளில் மொத்த படக்குழுவும் மீண்டும் அஜர்பைஜான் செல்கிறது.

இவ்வளவு கஷ்டப்பட்டு நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் எடுத்து வரும் படம் டிராப் ஆனதாக வெளியான தகவல் மனதிற்கு வலியை கொடுத்தது. இதனால் படக்குழுவிற்கு, ரசிகர்களுக்கும் உற்சாகமளிக்கும் நோக்கத்தில் தான் படத்தின் பிடிஎஸ் காட்சிகளை வெளியிட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் விடாமுயற்சி படம் நவம்பர் மாதம் ரிலீஸாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Most Popular