Sunday, September 15, 2024
- Advertisement -
HomeEntertainmentசெப்.5ல் தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு.. லண்டனில் 100 நாட்கள் ஷூட்டிங்.. மகிழ் திருமேனி முன் ஆஜாராகும்...

செப்.5ல் தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு.. லண்டனில் 100 நாட்கள் ஷூட்டிங்.. மகிழ் திருமேனி முன் ஆஜாராகும் அஜித்குமார்!

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் யார் என்ற போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் எல்லாம் ஒரே ட்ராக்கில் ஓடிக் கொண்டிருக்க, அஜித் குமார் தனது பைக் போன பாதையில் உலக சுற்றுலாவில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். வாரிசு, துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்யப்பட்டன.

- Advertisement -

அதில் வாரிசு படத்தை  விடவும் துணிவு படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரிசு படத்தின் வசூல் அதிகமாக இருந்தாலும் தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. ஆனால் துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு படத்தின் வசூல் நிலவரத்தை வெளிப்படையாக அறிவித்ததோடு, அடுத்தடுத்து பெரிய படங்களை தயாரித்து வருகிறார்.

இதையடுத்து அஜித்குமார் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கதையில் சொதப்பியதால், லைகா நிறுவனம் இயக்குநராக மகிழ் திருமேனியை மாற்றியது. இதன்பின் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பதற்கான பணிகளில் லைகா நிறுவனம் தீவிரமாக இருந்தது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ”விடாமுயற்சி” என்று அஜித்குமார் பிறந்தநாளன்று படத்தின் பெயரையும் அறிவித்தது. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித்குமார் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுலாவுக்கு சென்றுவிட்டார்.

- Advertisement -

இதனால் விடாமுயற்சி படம் தொடங்குவது எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது. ஏனென்றால் விஜய் லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்து அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஆனால் அஜித் இன்னும் அடுத்தப் படத்தின் படப்பிடிப்புக்கே வரவில்லை. இந்த நிலையில் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதில் வரும் செப்டம்பர் மாதத்தில் லண்டனில் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், தொடர்ச்சியாக 100 நாட்கள் ஷூட்டிங் நடக்கவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் அஜித்குமார் ரசிகர்கள் நம்மதியடைந்துள்ளனர்.

Most Popular