Saturday, April 20, 2024
- Advertisement -
HomeEntertainmentஓடிடி நாயகனான அஜித்.. நெட்பிளிக்சில் புதிய சாதனை படைத்த துணிவு

ஓடிடி நாயகனான அஜித்.. நெட்பிளிக்சில் புதிய சாதனை படைத்த துணிவு

- Advertisement -

கடந்த ஜனவரி பதினொன்றாம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தது அஜித் நடித்த துணிவு திரைப்படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சுறுசுறுப்பாக நடித்து அசத்திருந்தார். இதனால் அஜித்தை புது மாதிரி பார்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.  வாரிசு திரைப்படத்துடன் துணிவு திரைப்படம் மோதியதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.

துணிவு திரைப்படம் அஜித் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலை ஈட்டிய பெருமையை பெற்றது. தமிழ்நாட்டில் 118 கோடி ரூபாயும் உலக அளவில் 60 கோடி ரூபாயும் துணிவு திரைப்படம் ஈட்டியது. இதன் மூலம் வெளிநாட்டில் அஜித் படம் அதிக வசூல் பெற்றது இதுவே முதல் முறை ஆகும். இதன் மூலம் 193 கோடி வசூலை பெற்ற துணிவு திரைப்படம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நெட்பிளிக்சில் ரிலீசானது.

- Advertisement -

இதில் துணிவு திரைப்படம் பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரிலீசான முதல் நாளிலே இந்திய அளவில் முதல் நான்கு இடத்தில் மூன்றில் துணிவு திரைப்படம் பெற்றுள்ளது. அதாவது துணிவு தமிழ் மொழி முதல் இடத்திலும், துணிவு ஹிந்தி மொழி இரண்டாவது இடத்திலும், துணிவின் தெலுங்கு டப்பிங் நான்காவது இடத்திலும் உள்ளது.

- Advertisement -

இதேபோன்று நெட்பிளிக்ஸ் பயன்படுத்தப்படும் 27 நாடுகளில் துணிவு திரைப்படம் முதல் பத்து இடங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாக ஓடிடி தளங்களில் படத்தை ரிலீஸ் செய்து சூப்பர் ஹிட் ஆக்கியவர் சூர்யா. இதனால் அவரை ரசிகர்கள் ஓடிடி நாயகன் என்று கூறுவார்கள். தற்போது துணிவு திரைப்படம் நெட்பிளிக்சில் மெகா ஹிட் ஆனதை அடுத்து அந்த பெருமை தற்போது அஜித்துக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே அஜித்தின் வலிமை, நேர்கொண்ட பார்வை ஆகியவை ஓடிடியில் பெரிய ரெகார்டுகளை படைத்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் அடுத்த படத்தையும் நெட்பிளிக்சில் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular