Tuesday, May 7, 2024
- Advertisement -
HomeUncategorizedஅஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.. ! ஷூட்டிங் துவங்கும் தேதி அறிவிப்பு.. !

அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.. ! ஷூட்டிங் துவங்கும் தேதி அறிவிப்பு.. !

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் 62வது அறிவிப்பு நடிகர் அஜித்குமாரின் 52வது பிறந்தநாள் அன்று வெளியானது. விடாமுயற்சி எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்க்காக வேதாளம், விவேகம் படங்களில் மாஸான பி.ஜி.எம் கொடுத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

- Advertisement -

துணிவு படத்தை நிறைவு செய்த பிறகு உடனே விக்னேஷ் சிவனுடன் தன் அடுத்த படத்தை துவங்கவிருந்தார் அஜித். ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் திரைக்கதையை முழுமையாக முடிக்காமல் இருந்தார் எனக் காரணம் காட்டி அவரை நீக்கினார். அடுத்து மற்ற இயக்குனர்களின் கதைகளை கேட்க ஆரம்பித்தார்.

பல வதந்திகள் துவக்கத்தில் பரவினாலும் மகிழ் திருமேனி இயக்குவது விரைவில் உறுதியானது. இரு மாதங்கள் அவரின் பணிகளை முடிக்க லைகா நிறுவனம் நேரம் கொடுத்தது. அவரும் அதைச் சரியாக செய்து முடித்துவிட்டார். ரசிகர்களுக்கு அப்டேட்டும் வழங்கப்பட்டது.

- Advertisement -

விடாமுயற்சி புதிய அப்டேட்

படத்தின் முதல் ஷூட்டிங் அட்டவணை மே 22ஆம் தேதி தொடங்குகிறது. 30 நாட்கள் நடைபெறும் இந்தப் அட்டவணையில் அஜித்குமார் 20 நாட்கள் அளித்துள்ளார். சப்ஸ்பன்ஸ் திரில்லர் வகையில் இந்தப் படம் உருவாகிறது. ஷூட்டிங் பணிகள் அனைத்து குறைந்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளனர். லியோ படத்தைப் போலவே இந்த படமும் குறைந்த நேரத்தில் ஷூட்டிங் செய்யபட்டு வெளியிடப்படவுள்ளது. பொங்கலுக்கு மீண்டும் தல தீபாவளியை எதிர்பார்க்கலாம்.

Most Popular