Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentவாரி கொடுக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்.. விஸ்வாசத்தை மாற்றிய தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்கள்.. 

வாரி கொடுக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்.. விஸ்வாசத்தை மாற்றிய தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்கள்.. 

கொரோனா பரவலுக்கு பின் இந்தியா முழுவதும் வசூலை குவிக்கும் பான் இந்தியா திரைப்படங்கள் அதிகளவில் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக தெலுங்கு சினிமா நடிகர்களான பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு உள்ளிட்ட நாயகர்கள் பலரும் அனைத்து மொழிகளிலும் படங்களை வெளியிட தொடங்கியுள்ளனர்.

- Advertisement -

அதற்கேற்ப ஆதி புருஷ், சலார், ஆர்ஆர்ஆர், புஷ்பா உள்ளிட்ட படங்கள் வசூலை வாரி குவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து கேம் சேஞ்சர், தேவரா, ஸ்பிரிட், புஷ்பா 2 என்று பான் இந்தியா திரைப்படங்களில் தான் அவர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேபோல் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களும் தமிழ் சினிமா நடிகர்களை வைத்து படங்களை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் விஜய் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்திலும், நடிகர் சிவகார்த்திகேயன் லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரின்ஸ் படத்திலும் நடித்தனர். இரு படங்கள் தோல்வியை சந்தித்தாலும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் தமிழ் நடிகர்களை நோக்கி வருவதில் ஆர்வமாக உள்ளனர். அதிலும் உச்ச நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டி வருவது வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் விஜய் அடுத்த படத்தில் ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர்களான டிவிவி தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படமும், நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட்டணி இணையும் எஸ்கே23 படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனமும், நடிகர் அஜித் குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையவுள்ள படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது தெரிய வருகிறது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், தனுஷ் நடித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனமும் தயாரித்து வருகிறது. தமிழ் சினிமாவின் உசச் நடிகர்களின் 5 படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் மொத்தமாக தயாரிப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு தெலுங்கு சினிமா நிறுவனங்கள் அதிக சம்பளத்தை ஊதியமாக கொடுப்பதே காரணமாக உள்ளது. தனுஷ் ரூ.50 கோடி, அஜித் குமாருக்கு ரூ.110 கோடி, சூர்யாவிற்கு லாபத்தை குறிப்பிட்ட சதவிகிதம், சிவகார்த்திகேயனுக்கு ரூ.35 கோடி மற்றும் விஜய்-க்கு ரூ.120 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Most Popular