Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாபைக் ரைட் வரீங்களா சிவா எனக் கேட்ட அஜித்.. அதற்க்கு சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா.....

பைக் ரைட் வரீங்களா சிவா எனக் கேட்ட அஜித்.. அதற்க்கு சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா.. !

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏலியன் கான்செப்ட்டில் வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை எனும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கிய ரவிகுமார் மீண்டும் அதே வகையில் அயலான் படத்தை இயக்குகிறார். பல வருட சிக்கலுக்குப் பிறகு அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாகிறது.

- Advertisement -

ரீலீசுக்கு இன்னும் 3 வாரத்திற்கு குறைவாக இருக்கும் நிலையில் அயலான் படக்குழு அண்மையில் இரண்டாவது சிங்கிள் மூலம் புரமோஷன் வேலைகளை துவங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் குட்டி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தல அஜித்குமாரை சந்தித்து பேசிய விஷயங்களைப் பற்றி பகிர்ந்தார். ஒரு ஆண்டுக்கு முன் சிவகார்த்திகேயன் ஹைதராபாத்தில் அஜித்குமாரை சந்தித்தார்.

- Advertisement -

அஜித்குமார் தன்னிடம் பைக் ரைட் போவீங்களா எனக் கேட்டதாக கூறினார். அதற்க்கு சிவகார்த்திகேயன், “ சார் பைக் ரைட்னு சொன்னா உங்க அளவுக்குலாம் ஓட்ட முடியாது சார். எனக்கு தெரிந்தது உள்ளுக்குள்ள சுத்துவது தான். ஆனா ஆசை இருக்கிறது ” என பதிலளித்தாக தெரிவித்தார்.

- Advertisement -

மேலும், அஜித் சார் நாடு நாடாக பைக்கில் சென்று நிறைய பார்க்கிறார். சிவகார்த்திகேயன் பைக் குறித்து கேட்ட கேள்விக்கு, “ எங்க வீட்ல எனக்கு பைக் வாங்கித் தரவில்லை. நண்பர்கள் மற்றும் சித்தப்பாவின் பைக்கை தான் எடுத்து ஓட்டினேன். சித்தப்பாவின் சி.பி.சி பைக்கை கொஞ்ச நாள் வைத்திருந்து பராமரிக்க முடியாமல் திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்றார்.

அஜித் ஓட்டும் வண்டி சாதாரணமான பைக் இல்லை. முதலில் அந்த வண்டியை ஓட்டக் கற்றுக் கொண்ட பிறகு அவருடன் பைக் ட்ரிப் போவதற்கு ஆசையாக உள்ளது. புதுப் புது நாடுகளுக்கு சென்று புதிய விஷயங்களை பார்ப்பதை விட வாழ்கையில் அழகானது எதுவுமில்லை என தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Most Popular