Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. தல அஜித்தின் புதிய பிளான்.. இந்த வாட்டி சம்பவம் உறுதி.....

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. தல அஜித்தின் புதிய பிளான்.. இந்த வாட்டி சம்பவம் உறுதி.. !

அல்டிமேட் ஸ்டார் மற்றும் மக்களால் தல என்றழைக்கப்படும் அஜித்குமாரின் அடுத்தத் திரைப்படத்தின் அப்டேட் இன்னும் வராததால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு தற்போது டபிள் ட்ரீட் கொடுக்க அஜித் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்புகள் மெல்ல மெல்ல வெளியாகும்.

- Advertisement -

கடந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு படத்திற்கு பிறகு அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தின் அனிருத் இசையில் விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தம் ஆகினார். இன்றுவரை அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவருடன் வாரிசு படத்தை வைத்து மோதிய தளபதி விஜய்யோ லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் தலைமையில் ‘ கோட் ’ படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

இன்னும் சொல்லப் போனால் விடாமுயற்சி படம் வெளியாகும் முன்னே விஜய் தனது அடுத்தப் படத்தையும் வெளியிட்டு விடுவார். அஜித் முன்னது போல் இல்லாமல், கடந்த சில ஆண்டுகளாகவே பைக்கில் உலக சுற்றுலாவில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருவதால் ஷூட்டிங் நேரத்தை குறைத்துள்ளார்.

- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி 70% பணிகளை தாண்டிவிட்டது. எஞ்சி இருக்கும் ஷூட்டிங்கை ஓரிரு மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனை அடுத்து மித்ரி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் தனது அடுத்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், ஆதிக் ரவிச்சந்திரனின் துணை இயக்குனர் ஏற்கனவே டிவிட்டரில் அதனை உறுதி செய்துவிட்டார்.

இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். வீரம் படத்திற்கு பின் மீண்டும் அஜித் – டி.எஸ்.பி காம்போ ஜோடி சேர்கிறது. மே – ஜூன் மாதங்களில் ஷூட்டிங் துவங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே திரைக்கு கொண்டுவர திட்டமும் வகுத்துள்ளனர். இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட் தான்.

Most Popular