Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentபுது கெட்டப்பில் வந்த அல்லு அர்ஜூன்.. புஷ்பாவ பார்த்த புலியே பின்னாடி போகும்டா.. ரசிகர்களிடையே கேலிக்குள்ளாகும்...

புது கெட்டப்பில் வந்த அல்லு அர்ஜூன்.. புஷ்பாவ பார்த்த புலியே பின்னாடி போகும்டா.. ரசிகர்களிடையே கேலிக்குள்ளாகும் புஷ்பா – 2 ட்ரெய்லர்!

நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா-2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அல்லு அர்ஜூனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வைரலாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

- Advertisement -

தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டாரான அல்லு அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பகத் பாஷில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப்படம், மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

இந்தநிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்தது. முன்னதாக கே.ஜி.எப்-2 பார்த்த இயக்குநர் சுகுமார், புஷ்பா-2 படத்திற்கான கதை மற்றும் காட்சியமைப்பில் சில மாற்றங்கள் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தநிலையில்தான் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா-2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் இறந்துவிட்டதாக கூறப்படும் புஷ்பா, காட்டில் புலியின் அருகே எண்ட்ரி கொடுக்கும் காட்சி அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், “புலியே 2 அடி பின்னால வச்சா” என்ற வசனம் தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகியுள்ளது. டிரைலரில் வரும் காட்சிகள், வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே புஷ்பா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் அல்லு அர்ஜூன். ஆண், பெண் அவதாரம் எடுத்த கடவுளின் கெட்டப் என பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், திருப்பதியில் நடக்கும் திருவிழாவில் இதுபோன்ற வேடங்களை காண முடியும் என சிலர் கூறுகின்றனர். படக்குழு இந்த போஸ்டர் குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல், சர்ப்ரைஸாக வைத்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் விவாதம் கிளம்பியுள்ளது.

Most Popular