Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாவெப் சீரிஸ்Alter Ego என்றால் என்ன? லியோ படத்தின் பாடலால் தேடும் ரசிகர்கள்

Alter Ego என்றால் என்ன? லியோ படத்தின் பாடலால் தேடும் ரசிகர்கள்

- Advertisement -

2023 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது லியோ தான். தளபதி விஜய் ,லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர். இதனால் இந்த படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கான சூட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தளபதி விஜய் பிறந்தநாள் முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி லியோ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆகும் என்று அவர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தப் பாடலுக்கு ஆல்டர் ஈகோ நான் ரெடி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் ஆல்டர் ஈகோ மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்குமா என ரசிகர்கள் தேடி வருகின்றனர். அதாவது ஆல்டர் ஈகோ என்றால் ஒரே மனிதர் இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்வதுதான்.

- Advertisement -

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் சூப்பர் மேன் எப்படி யாருக்கும் தெரியாமல் பத்திரிக்கையாளராக இருப்பாரோ ஸ்பைடர் மேன் யாருக்கும் தெரியாமல் எப்படி போட்டோகிராபராக இருப்பாரோ அதேபோல் தான் ஆல்டர் ஈகோவும்.

ஒரு நபருக்கு இப்படிப்பட்ட ஒரு பின்புலம் ஒரு வாழ்க்கை இருக்குமா என்று நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாத படி இருக்கும். இதில் இரண்டு விதமான வகை இருக்கிறது. தாம் இன்னொரு வாழ்க்கையை வாழ்கிறோம் என்று நமக்குத் தெரியாமலே இருக்கும் மனத்தத்துவ பிரச்சினை.

  இரண்டாவது வகை சூப்பர் ஹீரோ போல் மறைவு வாழ்க்கையை வாழ்வது. இதில் முதல் வகை என்றால் அது தமிழ் சினிமாவுக்கு புதிய அனுபவமாக இருக்கும். ஏனென்றால் இது வரை ஆல்டர் ஈகோ கதையை வைத்து இந்த படமும் வந்ததில்லை. கிட்டத்தட்ட ஸ்பிலிட் பர்சனாலிட்டி மாதிரி.

இந்த கதையும் இருக்கும் முதல் பாடலின் பெயரிலேயே லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விட்டதால் இந்த படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாடலில் போஸ்டரில் விஜய் சிகரெட் வைத்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Popular