Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாவெப் சீரிஸ்மார்டன் லவ் சென்னை எனும் புதிய சீரிஸ் எப்படி இருக்கிறது.. ? முழு விவரமான விமர்சனம்.....

மார்டன் லவ் சென்னை எனும் புதிய சீரிஸ் எப்படி இருக்கிறது.. ? முழு விவரமான விமர்சனம்.. !

மே18ஆம் தேதி வந்த ‘ மார்ட்ன் லவ் சென்னை ’ அற்புதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. தியாகராஜா குமாராஜா படைப்பு தயாரிப்பாளராக விளங்க அவரது தலைமையில் 6 குறும்படங்கள் வெளியாகியுள்ளன. அசோக் செல்வன், ரித்து வர்மா, வமிக்கா கப்பி, நித்தியானந்தம், ஶ்ரீ கவுரி பிரியா, கிஷோர், விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 4 எழுத்தாளர்கள், 6 இயக்குனர்களின் படைப்பிப் உருவானது இந்த மார்ட்ன் லவ் சென்னை.

- Advertisement -

லாலாகுண்டா பொம்மைகள் – ராஜு முருகன்

காதல் தோல்வியைச் சந்தித்த ஶ்ரீ கவுரி பிரியா மீண்டும் மீண்டும் வருத்தத்தை மேற்கொள்கிறார். பின்னர் திருமணத்திற்கு சம்மதித்து தன் கணவருடன் சந்தோஷமாக வாழும் போது அந்த தருணத்தை மகிழ்ந்து காதலை உணர்வது போல் படம் முடிவடைகிறது. இந்த 6 படங்களில் இந்த படம் நல்ல கலகலப்பாகவும் அதே சமயம் காதலை அழகாகவும் எடுத்துரைக்கிறது.

இமைகள் – பாலாஜி சக்திவேல்

இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் டி.ஜே.பானு ஜோடியாக நடித்துள்ளனர். தன் காதலிக்கு கண் பார்வை போய்விடும் எனத் தெரிந்தும் அவளின் மேல் இருக்கும் காதலால் அவளை திருமணம் செய்கிறார். காலப் போக்கில் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் மற்றும் அதனால் வரும் வக்குவந்தாம் இயல்பான படத்தைப் பார்ப்பது போல் இருந்தது. இதில் மார்ட்ன் லவ் என எதுவும் பெரிதாக இல்லை.

- Advertisement -

காதல் என்பது கண்ணுல ஹார்ட் வச்ச எமோஜி – கிருஷ்ணகுமார் ராமாகுமார்

கதை முழுக்க பல ஆண் காதல்ரகள் ஒரு பக்கம் வர மறுபக்கம் ரித்து வர்மா மட்டும் கதை முழுக்க பயணிக்கிறார். சினிமாவைப் போல நிஜ வாழ்க்கையிலும் அதே போன்ற காதல் கிடைக்கும் எனத் தேடி தேடி பல முறை ஏமாற்றுகிறாள். சினிமாவிற்கு நிஜ வாழ்கைக்கும் வித்தியாசம் தெரிந்த பின் தன் கணவருடன் ஆனந்தமாக வாழ்வது போல் கதை அமைந்துள்ளது. இந்தப் படம் நல்ல நகைச்சுவை தருணங்கள் கொண்டிருந்தாலும் எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் மிகவும் அதிகம் எனத் தோன்றும்.

- Advertisement -

மார்கழி – அக்ஷய் சுந்தர்

பள்ளியில் பயிலும் இரு குழந்தைகள் தேவாலயத்தில் சந்தித்து காதலில் விழுகிறார்கள். இந்தப் படம், பெண் பிள்ளைகள் 18+ விஷயங்களை பேசுவது இயல்பு எனத் தெளிவாக காட்டி பெண்களும் காதலில் முதலில் விழுவர் என்பதைக் காட்டுகிறது. சொன்ன செய்து நன்றாக இருந்தாலும் பார்பதற்கு மிகவும் சுமாராகவே தென்படுகிறது. நினைவில் வைத்துக் கொள்ளும் படியோ அல்லது ஈடுபாடோடு கதை நகரவில்லை.

பறவைகள் கூட்டில் வாழும் மான்கள் – பாரதிராஜா

தன் இனிய நண்பன் பாலு மகேந்திராவுக்காக அவரது ஸ்டைலில் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் பாரதிராஜா. பாலு மகேந்திராவின் மறுபடியும் படத்தில் கதையை மையமாகக் கொண்டு அதை நடிப்புக்கு ஏற்றவாறு மாற்றி படம் செய்துள்ளார். திருமணம் முடிந்து வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போதும் விவாகரத்து பெற்று தனக்கு பிடித்த பெண்ணுடன் வாழ்க்கையை தொடர்வது கதை. வசனங்கள் மற்றும் இயக்குனர் டச் தான் இந்தப் படத்தின் சிறப்பே.

நினைவோ ஒரு பறவை – தியாகராஜான் குமாரராஜா

அனைத்து படங்களுக்கும் டான் இது தான். மார்ட்ன் லவ் எனும் தலைப்புக்கு ஏற்ற சரியான சிறந்த படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர். இந்தப் படம் நான் லினியராக அமைந்துள்ளதால் எந்த இடத்தில் துவங்கி பார்த்தாலும் படம் புரியும். நினைவை இழந்த காதலன் தனக்கு காதல் தோல்வி அடைந்துதைக் கூடத் தெரியாமல் வாழ்கிறான். இடையே காதலியின் நினைவால் என மொத்தமும் நினாவால் உருவாகியுள்ள படம் நினைவோ ஒரு பறவை. ஒளிப்பதிவு மிகத் தரம். அதோடு தியாகராஜான் குமாரராஜாவின் காட்சி வடிவமைப்பு மிகப் பெரிய தாக்கத்தைக் கொடுக்கும். அனைத்திலும் சிறந்த படம் இது தான்.

அனைத்து படங்களும் ஒவ்வொரு விதத்தில் நல்ல படங்கள் தான். 6 படங்களின் இசைகளும் மிக மென்மையாக இருக்கிறது. இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், சீன ரோல்டன் நால்வரும் சூப்பரான பாடல்களைக் கொடுத்துள்ளனர்.

Most Popular