வெப் சீரிஸ்

பாலிவுட்டை மிரள விட்ட விஜய் சேதுபதி.. தமிழன் கெத்து தான்.. விவரம் இதோ

நடிகர் விஜய் சேதுபதி தனது நடிப்பால் எப்படி மிரட்டுவார் என்று நாம் அனைவருக்குமே தெரியும். புதுப்பேட்டை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி பிறகு நடிகராக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவின் கொடி கட்டி பறந்து வருகிறார் விஜய் சேதுபதி. குறிப்பாக பவர்ஃபுல் வில்லன் வேண்டும் என்றால் அனைவரின் மனமும் விஜய் சேதுபதி பெயரை தான் தேடுகிறது.

Advertisement

மாஸ்டர், விக்ரம் பேட்ட போன்ற படங்களில் கலக்கிய விஜய் சேதுபதி தெலுங்கிலும் தனது திறமையை ஒப்பேனா படம் மூலம் நிரூபித்து இருக்கிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள பார்சி என்ற வெப் சீரிஸ் மூலம் அடியெடுத்து வைக்கிறார். ஹிந்தியில் பெரிய பொருட்செலவில் உருவான இந்த வெப் சீரிஸில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அர்ஜுன் ரெட்டி ,ஜெர்சி போன்ற படங்களின்  ஹிந்தி ரீமேக்கில் நடித்த சாஹித் கபூர் ,ராசி கண்ணா, ரெஜினா கேசந்திரா போன்ற பிரபலங்கள் இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்கள். கள்ள நோட்டை உருவாக்கி இஷ்டத்திற்கு செலவு செய்யும் இளைஞனாக சாகித் கபூர் நடித்திருக்கிறார் .இதனை பிடிக்க வரும் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதில் அவருடைய பெயர் மைக்கேல் வேதநாயகம் .

Advertisement

தமிழர் ஒருவர் வட இந்தியாவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் வகையில் இந்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் விஜய் சேதுபதி தனது நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு உள்ளார். காமெடி, ஆக்சன் திரில்லர் என கதை செல்லும் நிலையில் அதற்கு விஜய் சேதுபதி செம டஃப் கொடுத்து நடித்திருக்கிறார் .இதனை பார்த்து வட இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பிரமித்து போய் உள்ளனர்.

பலரும் விஜய் சேதுபதியை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பல்வேறு வட இந்திய ஊடகங்களும் விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டுகிறது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகர் ஒருவர் பாலிவுட்டில் கலக்கி இருப்பது நமக்கு நல்ல செய்தி தானே.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top