Saturday, October 5, 2024
- Advertisement -
Homeசினிமாவெப் சீரிஸ்கண்டா வரச் சொல்லுங்க!! மணிகண்டன கண்டா வரச் சொல்லுங்க!!  மத்தகம் கிளைமாக்சே வரலியே  -வெப் தொடர்...

கண்டா வரச் சொல்லுங்க!! மணிகண்டன கண்டா வரச் சொல்லுங்க!!  மத்தகம் கிளைமாக்சே வரலியே  -வெப் தொடர் விமர்சனம் !

நேற்று டிஸ்னி ப்ளஸ்  ஹாட் ஸ்டாரில்  வெளியாகிய வெப் தொடர், மத்தகம்..
மொத்தம் 3 :15 மணி நேரம்  இந்த வெப் தொடர் இருக்கிறது. இந்த தொடரை பிரசாத் முருகேசன் என்ற இயக்குனர் இயக்கியுள்ளார்.
இதில் நடிகர் அதர்வா, மணிகண்டன் ,நிகிலா விமல், கௌதம் மேனன், டிடி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

  மத்தகம் வெப் தொடர் இரண்டு சீசன்களாக வெளிவர உள்ளது ..
முதல் சீசனில் 5 எபிசோட்களை கொண்டுள்ளது. இதில் நடிகர் அதர்வா என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்து அனைவரது அனுதாபங்களையும் அள்ளிய மணிகண்டன். படாளம் சேகர் என்கிற ரவுடி கதாபாத்திரத்தில் ரவுடியாக களமிறங்கி உள்ளார்.

நேர்மையான அதிகாரியான அதர்வா, தன் குழுவுடன் சென்னையில் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடுவதாக காட்சிகள் தொடங்குகிறது. அந்த சோதனையின் போது ஒரு ரவுடி கும்பல் அதர்வாவிடம் பிடிப்படுகிறது.

- Advertisement -

;அவர்களை விசாரிக்கும் நேரத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்று அதர்வாவுக்கு கிடைக்கிறது.!
கார் விபத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதாக கருதப்படும் ,கொடூர வில்லனான படாளம் சேகர் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறார் என்று தெரிய வருகிறது!!

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் தன் பிறந்த நாளை அனைத்து ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டு இருப்பதும்!!! ,அனைவரும் சேர்ந்து மிகப்பெரிய நாச வேலை ஒன்றை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பதும்  தெரிய வருகிறது!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று ஒட்டுமொத்த  ரவுடிகளையும் கொத்தாக பிடிக்க திட்டங்களை வகுக்கிறார் அதர்வா!!
தான் தீட்டிய திட்டத்தில் அதர்வா வெற்றி பெற்றாரா? அல்லது மணிகண்டனின் சதி திட்டத்தில் அதர்வா  வீழ்ந்தாரா என்பதுதான் மத்தகம் தொடரின் கதை சுருக்கம்.

மத்தகம் என்றால் யானையின் நெற்றியை குறிக்குமாம்…
இதில் அதர்வாவின் மனைவியாக நிக்கிலா விமல் நடித்துஇருக்கிறார். தனக்காக நேரம்  அதர்வா செலவிட வேண்டும் என்று ஏங்குகிறார்.
முதல் பாகத்தில் விறுவிறுப்பாக தொடங்கிய தொடர் ,அடுத்தடுத்த பாகங்களில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதிலேயே நகர்கிறது .ரவுடிகள் பற்றிய கதையாக இருந்த போதும் இரத்தவாடை அதிகம் வீசாமல் இருப்பது சற்றே ஆறுதலான விஷயம்.

திரைக்கதை மந்தமாக செல்லாமல் இருந்திருந்தால் மத்தகத்தை சீசன் 1ல் இன்னும் ரசித்து இருக்கலாம்!!!
ஆனால் இது முதல் பாகம் என்பதால் மர்ம முடிச்சுகள் மட்டுமே உள்ளது ! இரண்டாவது சீசனில் முடிச்சுகள் அவிழும் போது திரைக்கதையும் சூடு பிடிக்கும் என்று நம்பலாம் ..!?

திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளனர்.
பார்ட்டி தொடங்குமா ? வில்லாதி வில்லன் என்ட்ரி கொடுப்பாரா ? என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும்  பொழுது , முதல் பாகம் முற்றுப்பெறுவது  ஏமாற்றம் அளிக்கிறது.

இதோ வந்து விடுவார் அதோ வந்து விடுவார் மணிகண்டன் என்று பார்த்தால் இறுதிவரை வரவில்லை!! அதர்வாவும் மணிகண்டனும் இணைந்து காட்சிகள் தெறிக்க விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்..அடுத்த பாகத்தில் பார்ட்டி தொடங்கி, விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை திருப்தி படுத்துமா மந்தகம்…!?

Most Popular