Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாஇது லிஸ்டில் இல்லையே.. ஹீரோவாக நடிக்க போகும் லோகேஸ், அனிரூத்

இது லிஸ்டில் இல்லையே.. ஹீரோவாக நடிக்க போகும் லோகேஸ், அனிரூத்

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஹீரோவுக்கு பதிலாக இயக்குனர்களே நடிக்க தொடங்கி விட்டார்கள். சுந்தர் சி, எஸ் ஜே சூர்யா, பிரதீப் ரங்கநாதன் என பல இயக்குனர்கள் தற்போது ஹீரோக்களாக கலக்கி வருகிறார்கள்.

இந்த வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக விளங்கிவரும் லோகேஸ் கனகராஜ் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் ஒரு சின்ன ரோலில் வருவார். தற்போது லோகேஷ் கனகராஜ் வைத்து ஹீரோவாக படம் செய்ய சிலர் முயற்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் மட்டும் ஹீரோ கிடையாது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதை ஒன்றை சண்டை இயக்குனர்கள் அன்பு அறிவு இயக்க முடிவு எடுத்திருக்கிறார்கள். இதற்காக இசை அமைப்பாளர் அனிருத் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

- Advertisement -

இந்த செய்தி வெளியானதும் முதலில் இதனை யாரும் நம்ப கூட இல்லை. ஆனால் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் மிகவும் சந்தோஷம்,வாங்க கலக்குவோம் கண்ணுங்களா என்று அவர் பாராட்டியுள்ளார்.

இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் அனிருத் ஆகியோர் ஹீரோக்களாக அறிமுகமாவது உறுதியாகிவிட்டது. இது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் அனிருத்தும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி பிஸியாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் எப்படி படத்தின் நடிக்க நேரம் கொடுப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Most Popular