Wednesday, May 8, 2024
- Advertisement -
HomeEntertainmentபிசினஸ்மேனை 2வதாக திருமணம் செய்கிறாரா டிடி? உண்மையை போட்டு உடைத்த அக்கா பிரியதர்ஷினி

பிசினஸ்மேனை 2வதாக திருமணம் செய்கிறாரா டிடி? உண்மையை போட்டு உடைத்த அக்கா பிரியதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக வலம் வரும் டிடி, சமீப நாட்களாக தனது யூட்யூப் சேனல், பட புரமோஷன்களில் மட்டுமே தலையை காட்டி வருகிறார். அதேபோல் விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலேயே அதிக வருவாய் கிடைப்பதால், தொலைக்காட்சி பக்கமே வருவதில்லை.

- Advertisement -

அதேபோல் இன்ஸ்டாகிராமில் டிடி பதிவிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் சினிமா பக்கமும் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார் டிடி. இவருக்கு 2014ஆம் ஆண்டு நீண்ட கால நண்பரான  ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் என்றாலும் இரு வீட்டின் சம்மதத்துடன் நடைபெற்றது.

ஆனால் திருமணத்திற்கு பின் டிடி தொலைக்காட்சி பக்கம் செல்ல கூடாது, சினிமாவில் நடிக்க கூடாது என்று பல்வேறு கண்டிஷன்களை ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் திருமணம் முடிந்த 6 மாதங்களிலேயே டிடி-க்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இதன்பின் இருவரும் நீண்ட நாட்களாக பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளனர்.

- Advertisement -

இதன்பின் சில ஆண்டுகளில் இருவரும் முறையாக நீதிமன்றம் மூலமாக விவாகரத்து பெற்றனர். அதன்பின் டிடி தொடர்ந்து சினிமா, தொலைக்காட்சி என்று தீவிரமாக இயங்கி வந்தார். 36 வயதை கடந்த போதும் டிடி தனியாகவே வாழ்ந்து வருகிறார். இதனிடையே டிடி விரைவில் 2வது திருமணம் செய்ய போவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வந்தது.

- Advertisement -

இதுகுறித்து டிடி-யின் அக்கா பிரியதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார். அதில், டிடி-யை பொறுத்தவரை அவள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதனை பற்றி அவள் கவலைப்படாமல் பணியாற்றி கொண்டே இருக்கிறாள். அடிக்கடி டிடி-க்கு இரண்டாவது திருமணம் நடக்க போவதாக தகவல் வருகிறது. அதுவும் ஒரு பிசினஸ்மேன் என்று சொல்கிறார்கள். அது யாரென்று எங்களுக்கும் தெரியவில்லை. தெரிந்தால் நிச்சயம் கட்டி வைத்துவிடலாம் என்று கிண்டல் செய்திருக்கிறார்.

Most Popular