Entertainment

பாபா படத்தில் நடித்த இந்த நட்சத்திரம் யாருனு உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் ஓய்வு எடுத்துக் கொண்ட ரஜினி ,அதன் பிறகு நடித்த திரைப்படம் தான் பாபா .மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்த இந்த திரைப்படம் ரஜினியின் பழைய படங்களுக்கு நிகராக வசூலை ஈட்டவில்லை.எனினும் 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை இயற்றிய திரைப்படம் என்ற பெயரை பாபா பெற்றது.

Advertisement

ஆன்மீகம் அரசியல் நாத்திகம் என மூன்றையும் கலந்த கலவையாக உருவான இந்த திரைப்படம் குழந்தைகளுடைய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தால் நஷ்டம் அடைந்ததாக கூறி திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்க ரஜினி அவர்களுக்கு நஷ்டத்தை ஈடு செய்த சம்பவம் அரங்கேறியது.

Advertisement

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாபா திரைப்படம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே கமல்ஹாசன் நடித்து வெளியான ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது என அறிவிக்கப்பட்டது .

இந்த நிலையில் தான் ரஜினியின் பாபா ரிலீஸ் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனினும் ரஜினி தீவிர ரசிகர் சிலர் பாபா திரைப்படத்தை போல் மற்ற திரைப்படங்களையும் மீண்டும் திரையில் மறு வெளியீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பாபா திரைப்படம் குறித்து போஸ்டர் ஒன்றை ரோகிணி திரைப்பட உரிமையாளர் வெளியிட்டார். அதில் இந்த போஸ்டரில் ஒரு குழந்தை நட்சத்திரம் இருக்கிறார் அதனை கண்டுபிடிங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில் ரஜினிக்கு அருகில் அதே போல் தலைப்பாகை கட்டிக்கொண்டு இசையமைப்பாளர் அனிருத் நிற்கிறது தற்போது தான் நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். அனிருத் ,ரஜினிகாந்தின் உறவினர் என்பதால் அவர் பாபா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருக்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை அதிக அளவில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top