Sunday, May 12, 2024
- Advertisement -
Homeசினிமாஅப்பா இறந்த துக்கத்தில் இருந்தேன் அப்போது கூட என்னை விட்டு வைக்கவில்லை .. நெட்டிசன்கள் செய்த...

அப்பா இறந்த துக்கத்தில் இருந்தேன் அப்போது கூட என்னை விட்டு வைக்கவில்லை .. நெட்டிசன்கள் செய்த வேலையால் மனம் கலங்கி பேசிய அனிதா சம்பத்..!

சின்னத்திரை, பெரிய திரை தொகுப்பாளர்கள youtubeபர்கள் போன்ற பல பிரபலங்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இவர்கள் வாழ்க்கையில் எல்லாம் என்ன சோகம் இருந்திடப் போகிறது என்று நினைக்கும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை முறையை மகிழ்ச்சியாக வெளிப்படுத்துகிறார்கள் .

- Advertisement -

ஆனால் அவர்களும் மனிதர்கள் தான் அவர்கள் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ,கடந்துவர முடியாத பல சோக நிகழ்வுகளை மறைத்துக் கொண்டுதான் வெளியே சிரிக்கிறார்கள். அது அவர்கள் உண்மை முகம் அல்ல என்பதற்கு மிகப் பெரிய ஆதாரத்தை காட்டியிருக்கிறார் பிரபல செய்தியாளரும், விஜய் டிவியின் புகழுமான அனிதா சம்பத்.

இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் செய்தி வாசிப்பவராக தொலைக்காட்சியில் அறிமுகமானார் .அனிதா சம்பத் அப்பொழுதே அவருடைய அழகும் அவருடைய தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவரை பிரபலப்படுத்தியது. பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கண்டஸ்டாக விஜய் டிவிக்குள் நுழைந்தார் அனிதா. இவர் தற்பொழுது கலாட்டா சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார் .அந்த பேட்டியில் அவரும் அவருடைய கணவர் பிரபுவும் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்தப் பேட்டியில் அனிதாவிற்கு தன் அப்பாவை பற்றி கூற வேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதற்கு அவர் கண்ணீர் மல்க  அளித்த பதில்கள் நெஞ்சை உருக்கி விட்டது. பிக் பாஸில் இருந்து வெளிவந்த அனிதா தன் தந்தையின் சடலத்தை தான் பார்த்திருக்கிறார் அது எந்த ஒரு மகளுக்கும் நேரக் கூடாத கொடுமை. அதை அனிதா சந்தித்திருக்கிறார்.

- Advertisement -

தன் மீது உயிரையே வைத்திருந்த தந்தையை வெளிநாடுகளுக்கு சுற்றுலா கூட்டி செல்வதற்காகவும் தன் தாய்க்கு தாலி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ்க்கு சென்று இருக்கிறார் அனிதா .இரண்டு கனவுகளும் ஒரே நிகழ்வில் சுக்கு நூறு ஆகிவிட்டது. அவர் வெளிவரும் பொழுது தன் தந்தையும் மரணித்து விட்டார் அதனால் தன் தாய்க்கும் தாலி தேவை இல்லாமல் போக்கிவிட்டது.

தன் ஒட்டுமொத்த கனவும் ஒரே நாளில் முடிந்து போன துக்கத்தில் இருக்கும் அனிதாவை பிக் பாஸில் அவர் நடந்து கொண்ட விதத்திற்கு கமெண்ட்ஸ் என்ற பெயரில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல ஹெட்ரஸ்கள் அனிதாவை காயப்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று சில பேர் உன் தந்தை இறந்தது சரிதான் என்று கூட கமெண்ட்ஸ் மூலம் அனிதாவை காயப்படுத்தி இருக்கிறார்கள்.

நம் இஷ்டத்திற்கு பிறர் பற்றி யோசிக்காமல் நினைப்பதை  கூறுவதாக நினைத்துக்கொண்டு கமெண்ட்ஸ் என்ற பெயரில் சொந்த வாழ்க்கையை பற்றி கவலை இன்றி ஒருவரை காயப்படுத்துகிறோம் ஆனால் அது எந்த அளவிற்கு அவர்களை பாதிக்கிறது என்பது அனிதாவின் மூலமாக கற்றுக் கொள்ள வேண்டும் .தந்தையின் உடலை வைத்து நிம்மதியாக கதறி அழுவதற்கு கூட முடியாத அளவிற்கு அனிதாவை அந்த கமெண்ட்ஸ்கள் வாட்டி எடுத்திருக்கிறது.

தாய்க்கும் தனது மாமியாருக்கும் உடல் நலத்தில் குறைபாடுகள் அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று அனிதாவும் அனிதாவின் கணவரும் மட்டும்தான் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குடும்பத்தை நல்ல முறைக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்படி எல்லாம் தன் குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்களை இது போன்ற கமெண்ட்ஸ்களால் முடக்கி வைக்கிறார்கள் பொதுமக்களும் ரசிகர்கள்.

இதனால் அனிதா சம்பத்தும், அவருடைய தம்பி , அவருடைய தாய் என்று தந்தையின் இழப்போடு சேர்த்து இதுபோன்ற செயல்களாலும் மனம் நொந்து ஒரு வருடம் முழுமையாக தூக்கம் இன்றி தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார் அனிதா சம்பத்.

வேதனை தாங்காமல் கொள்ளையடிப்பவன் கொலை செய்பவன் கற்பழிப்பவன் எல்லாம் உயிரோடு இருக்கிறான் என் தந்தை ஏன் இறந்தார் என்று மனம் நொந்து பேசினார் அனிதா. என்னை மனம் நோகும்படி கமெண்ட் செய்யும் அப்யூசர்கள் கூட உயிரோடு இருக்கிறார்கள் என் தந்தைக்கு ஏன் இந்த நிலைமை என்று கதறினார்.

இவற்றையெல்லாம் ஒரு கட்டத்திற்கு பிறகு புரிந்து கொண்ட அனிதா துயரத்தில் இருந்து மீண்டு வர ஒரு வழியை தேடி பிக் பாஸ் ஜோடிகளில் கலந்து கொண்டு டைட்டிலை வின் செய்து வெற்றி அடைந்திருக்கிறார். இது அவருடைய இயல்புக்கு கிடைத்த பரிசு என்றே கூறலாம் சோகத்தை தவிர வேறு எதையும் காட்டாமல் திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதில் அவர் வெற்றி பெற்றது பாராட்டிற்குரியது.

அனிதா பெற்றவர்கள் இருக்கும் பொழுதே அவர்களை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் அவர்களுக்காக நேரம் ஒதுக்கிட வேண்டும் .பணம் காசு கூட வரும் அப்பொழுது அவர்கள் இருப்பார்களா என்று நமக்கு தெரியாது. ஏன் நாமே இருப்போமா என்று கூட தெரியாது. இருக்கும் நாட்களில் அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார் அனிதா சம்பத்.

Most Popular