Wednesday, April 2, 2025
- Advertisement -
HomeEntertainmentஅனுஷ்காவிடம் திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி… சிரித்துக் கொண்டே நடிகை கூறிய பதில் என்ன தெரியுமா?

அனுஷ்காவிடம் திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி… சிரித்துக் கொண்டே நடிகை கூறிய பதில் என்ன தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. ஆரம்பத்தில் முழுக்க முழுக்க தெலுங்கு திரைப்படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த அவர், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து பலராலும் அறியப்பட்ட அனுஷ்கா, அடுத்ததாக விஜயுடன் ஜோடி போட்டு வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்தார்.

- Advertisement -

இந்தப் படத்தில் இடம் பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் அனுஷ்காவின் மார்க்கெட் எகிறிது. தொடர்ந்து சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி போட்டார் அனுஷ்கா. அதே நேரத்தில், அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அருந்ததி திரைப்படம் வெளியாகி வசூலை குவித்தது. ஹாரர் திரில்லர் ஜானரில் உருவான இந்த திரைப்படம், தெலுங்கு தமிழ் என இரண்டு திரையுலகிலும் நல்ல வரவேற்பை பெற, அனுஷ்கா புகழின் உச்சிக்குச் சென்றார்.

இதன்பிறகு வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் திரைப்படங்களில் அனுஷ்கா நடித்தார். மேலும் உச்ச நட்சத்திரமான ரஜினியுடன் லிங்கா மற்றும் அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படங்களிலும் அனுஷ்கா ஜோடி சேர்ந்தார்.

- Advertisement -

இந்த நேரத்தில்தான், பாகுபலி திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனுஷ்கா, பாகுபலியின் மூலம் உலகறியும் நடிகையாக வலம் வந்தார். இதன் பின்னர், இளம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்.

- Advertisement -

இந்த படத்திற்காக, தனது உடலை பருமனாக மாற்றிய அவர், அதிலிருந்து உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் சில காலம் திரைத்துறையில் இருந்த ஒதுங்கி இருந்த அனுஷ்கா, இப்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தில் நடித்திருக்கிறார். இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம், 41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சிரித்துக் கொண்டே நடிகை, இதற்கு உண்மையாகவே என்ன பதில் கூற வேண்டும் என்பது தெரியவில்லை. இயல்பாகவே அது உரிய நேரத்தில் நடக்கும் என்று கூறினார்.

Most Popular