Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்னப்பா இத்தனை நடிகர்களா.. வடசென்னையை ஓவர்டேக் பண்ணிருவாங்க போலயே.. கிறுகிறுக்க வைக்கும் நடிகர்களின் போஸ்டர்!

என்னப்பா இத்தனை நடிகர்களா.. வடசென்னையை ஓவர்டேக் பண்ணிருவாங்க போலயே.. கிறுகிறுக்க வைக்கும் நடிகர்களின் போஸ்டர்!

நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஏற்கனவே தனது 25வது படத்தின் கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டாலும் இயக்கப் பணியை வேல்ராஜ் செய்ததாகவே அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதன்பின் நடிகர் தனுஷ் பா.பாண்டி மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனது 50வது படத்தின் பணியையும் அவரே மேற்கொண்டுள்ளார். கடந்த இரு படங்களையும் சொந்த தயாரிப்பில் எடுத்த தனுஷ், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் வடசென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பிப்.19ஆம் தேதி தனுஷின் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் சமையல் வேலை செய்யும் தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மூவரும் கைகளில் கத்தியுடன் இருக்கின்றனர். அதேபோல் படத்தின் டைட்டிலாக ராயன் என்று அறிவிக்கப்பட்டது. காத்தவராயன் என்ற பெயரின் இரண்டாம் பாதியை தலைப்பாக்கியுள்ளார் தனுஷ்.

- Advertisement -

இந்த அறிமுக போஸ்டருக்கு பின் நடிகர் தனுஷ் ஒவ்வொரு நாளும் தனது படத்தில் நடித்த நடிகர்களின் அறிமுக போஸ்டரை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகரும், இயக்குநருமான எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டனர்.

- Advertisement -

இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் புகழ் சித்தப்பாவான சரவணன் நடித்துள்ளார். சமீபமாக ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் சரவணன் நடித்திருந்தார். தற்போது தனுஷ் படத்திலும் நடித்துள்ளார். அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular