Wednesday, February 12, 2025
- Advertisement -
HomeEntertainmentஏஆர் ரஹ்மான் கச்சேரியில் குளறுபடி.. விளக்கம் அளித்த ரஹ்மான்.. பெரிய மனசனு காட்டிவிட்டாரு!

ஏஆர் ரஹ்மான் கச்சேரியில் குளறுபடி.. விளக்கம் அளித்த ரஹ்மான்.. பெரிய மனசனு காட்டிவிட்டாரு!

சென்னையில் நேற்று நடைபெற்ற ஏ ஆர் ரகுமான் கச்சேரி மிகப்பெரிய குளறுபடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பலரும் ரஹ்மான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இடத்திற்கு போதுமான அளவைவிட அதிக அளவில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தான் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஒரு மாதம் கச்சேரி தள்ளி வைக்கப்பட்டதால் அந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக டிக்கெட் அதிக அளவில் விற்கப்பட்டதாகும் கூறப்படுகிறது.இதனால் பலருக்கும் இசைக்கச்சேரி நடக்க இருந்த மைதானத்தில் இடம் இல்லை மேலும் பலரும் பல விதமான பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறார்கள்.

பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் ஆகியவர் கூட்டு நெரிசலில் சிக்கி சீரழிந்து விட்டார்கள். தங்கள் வாழ்க்கையிலே இப்படி ஒரு மோசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள கச்சேரியை பார்த்ததில்லை என்றும் இதற்கு ரஹ்மானும் இந்த விழாவை நடத்திய அமைப்பும் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ரகுமான் தனது மவுனத்தை கலைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் நேற்று மக்கள் சொல்ல முடியாத பிரச்சனைகளை சந்தித்ததற்கு நான் மன வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ள ரஹ்மான் யாரெல்லாம் டிக்கெட் வாங்கி விட்டு மைதானத்திற்குள் வர முடியாமல் போனதோ அவர்கள் தங்களுடைய டிக்கெட்டுகளை போட்டோ எடுத்து தங்கள் சந்தித்த பிரச்சனைகளை மெயிலில் தெரிவித்து அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் பணத்தை திரும்பி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஹ்மான் கூறியுள்ளார். எனினும் ரஹ்மானில் இருந்த அறிவிப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பணம் பிரச்சனை இல்லை என்றும் இப்படிப்பட்ட ஒரு அமைப்பை நிகழ்ச்சி நடத்த நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

Most Popular