Entertainment

ஆர் யூ விர்ஜின்? ஸ்ருதி ஹாசனிடம் கேள்வி எழுப்பிய ரசிகர்.. சிறப்பான பதில் கொடுத்த நடிகை.. இனி இப்படி கேப்பீங்க..!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சில சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த சில காலங்களாக நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்த ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்துள்ளார். வால்டர் வீரய்யா, வீரசிம்ஹ ரெட்டி போன்ற படங்கள் கடந்த மாதங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

அடுத்ததாக கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் பிரபாசுடன் இணைந்து நடித்துவருகிறார் ஸ்ருதிஹாசன். இந்தப் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் டிரைலர் உள்ளிட்ட அப்டேட்களை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனிடையே இணையதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்ட ஸ்ருதிஹாசன் பல அதிரடியான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

எப்போதும் தைரியமாக பேசக்கூடிய ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் ஏடாகூடமான கேள்விகளுக்கு கூலாக பதிலளித்தார். அவருடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக ரசிகர் ஒருவர் கேட்க, ஒரே வார்த்தையில் நோ என்று கூறி அவரை அடக்கினார். இதேபோல, மற்றொருவர், ஸ்ருதிஹாசன் வெர்ஜினா என்று கேள்வி எழுப்ப, அதற்கு முதலில் வெர்ஜின் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சரியாக தெரிந்துக் கொள்ளும்படி கூடி அவருக்கு பதிலடி கொடுத்தார்.

Advertisement

தன்னுடைய காதலர் சாந்தனுவுடன் டேட்டிங்கில் உள்ளார் ஸ்ருதிஹாசன். இதுகுறித்து பகிரங்கமாகவே அவர் பேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இருவரும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொண்டு வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு தைரியமாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் இவர் தான் உளவியல் சிக்கல்களில் பாதிக்கப்பட்டதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top