Saturday, November 23, 2024
- Advertisement -
HomeEntertainmentசந்திரமுகி 2ல் இருந்து 480 ஷாட்கள் காணாமல் போயிடுச்சு… இயக்குனர் பி வாசு பகீர் தகவல்…...

சந்திரமுகி 2ல் இருந்து 480 ஷாட்கள் காணாமல் போயிடுச்சு… இயக்குனர் பி வாசு பகீர் தகவல்… அது எப்படி திமிங்கலம் என கேள்வி கேட்கும் ரசிகர்கள்…

இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தனது ஸ்டைலால் ஏகப்பட்ட ரசிகர்களை கட்டிப்போட்ட அவர், இப்போது வரை நம்பர் ஒன் நடிகராக திகழ்கிறார். எத்தனை தோல்விகள் வந்தாலும் அதை முறியடிக்கும் வகையில், ஆகச்சிறந்த ஹிட் படத்தை கொடுத்து விட்டு சோலோ சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தையும் இதற்கு ஒரு சான்றாக கூறலாம். கோச்சடையான் லிங்கா தர்பார் அண்ணாத்த என தோல்வியை கண்டு வந்த ரஜினிகாந்த்துக்கு, ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய கம் பேக்கை கொடுத்தது. கிட்டத்தட்ட 800 கோடி ரூபாயை தாண்டி இந்த படம் வசூல் செய்துள்ளது. இப்போது ஜெயிலர் படத்தைப் போல, 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படமும் ரஜினிக்கு கம் பேக்கை கொடுத்தது.

படையப்பா திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு, பாபா படத்தில் நடித்த அவர் படுதோல்வியை சந்தித்தார். இதிலிருந்து மீண்டு வருவதற்காக அவர் நடித்த திரைப்படம் தான் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், மலையாள படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது. பிரபு ஜோதிகா நயன்தாரா வடிவேலு உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். எந்தவித பஞ்ச் வசனங்களும் இல்லாமல், தனக்கே உரித்தான ஆக்சன் காட்சிகளையும் அறவே தவிர்த்து ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு ரஜினிகாந்தை பார்ப்பதற்கு மிகவும் புதுமையாக உள்ளதென அப்போதே ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். மனநல மருத்துவராக சரவணன் கதாபாத்திரத்திற்கு சரியாகப் புரிந்து போன அவர், வேட்டையனாகவும் அவதரித்து லக லக லக கூறி கலகலக்க வைத்தார். கிட்டத்தட்ட 500 நாட்களைக் கடந்து இந்த திரைப்படம் ஓடியது. அப்போதே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் இயக்குனர் பி வாசு.

- Advertisement -

ஆனால் அது நடக்க முடியாமல் போக இப்போது அதற்கான வேலையில் இறங்கி முடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இதில் ஹீரோவாக நடிக்க, லட்சுமிமேனன், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் படம் கடந்த 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இதை எடுத்து வரும் 28ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்த சூழலில், இது குறித்து தற்போது படத்தின் இயக்குனர் வாசு வாய் திறந்து இருக்கிறார். சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், சந்திரமுகி படத்தில் இருந்து 480 ஷார்ட்களுக்கான ஃபுட்டேஜ் காணாமல் போனது. படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததால், ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் சூழல் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார். இயக்குனரின் இந்த பதிலைக் கேட்டு ஆடிப் போய் உள்ள ரசிகர்கள், அது எப்படி படத்தின் காட்சிகள் காணாமல் போயிருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Most Popular