Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainment"பாம்பை கண்டா படையே நடுங்கும்… எங்க அண்ணனை பார்த்தா போதும் பாம்பே நடுங்கும்" சிறு மூளையை...

“பாம்பை கண்டா படையே நடுங்கும்… எங்க அண்ணனை பார்த்தா போதும் பாம்பே நடுங்கும்” சிறு மூளையை சிந்திக்க வைக்கும் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் பட பாடல் வரிகள்

‘விருமன்’ படத்துக்கு பிறகு முத்தையாவும், ’கேப்டன்’ படத்திற்குப் பின்னர் ஆர்யாவும் இணையப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் என படத்தலைப்புடன், சென்னை மற்றும் கோவில்பட்டி அருகே படப்பிடிப்பு நடைபெற்றது. வழக்கம்போல் இயக்குனர் முத்தையாவின் ட்ரெண்ட் செட் கதாபாத்திரமான கிராமத்து இளைஞன் வேடத்தில் ஆர்யா நடித்துள்ளார். டெடி, கேப்டன் ஆகிய படங்கள் ஆர்யாவிற்கு பெரிய வெற்றியை தராததால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. “இந்த உலகத்துல எந்த திசையில தப்பு நடந்தாலும், அந்தத் தப்பை தட்டிக் கேட்க சிங்கம் போல ஒருத்தன் வருவான்” என்னும் பஞ்ச் வசனத்துடன் ஆரம்பிக்கும் டீசரில், வழக்கமான ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளன. “அடிக்கிறது எனக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை, போற போக்குல எச்சில் துப்புற மாதிரி துப்பி தூக்கி எறிஞ்சிட்டு போய்கிட்டே இருப்பேன்” என ஆர்யா கூறும் வசனம், சுத்தமாக எடுபடவில்லை என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் படத்தின் டீசரே பரவாயில்லை என்பதற்கு ஏற்ப படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகி உள்ளது. “தவுலத்தான ரவுடி… கேடிக்கெல்லாம் கேடி… பேர சொன்னா கொல நடுங்கும்… வந்து நின்னா நிலநடுக்கம்”… என்பது போன்ற வரிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில், அதைக் கேட்டு சிலாகித்து போன ரசிகர்கள் இயக்குனர் முத்தையா கொஞ்சம் கூட அப்டேட்டே ஆக மாட்டாரா என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தௌலத்தான ரௌடி பாடல் வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Most Popular