Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentவெற்றிமாறன் இயக்கத்தில் ஏகே.. விடுதலை பட தயாரிப்பாளருடன் 2 படங்களில் ஒப்பந்தம்.. சம்பளத்தில் தளபதியை மிஞ்சிட்டாரே!

வெற்றிமாறன் இயக்கத்தில் ஏகே.. விடுதலை பட தயாரிப்பாளருடன் 2 படங்களில் ஒப்பந்தம்.. சம்பளத்தில் தளபதியை மிஞ்சிட்டாரே!

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என்று சமூக சிந்தனை கொண்ட படங்களையும், மக்களுக்கு எதிராக அரசாலும், அரசமைப்பாலும் செய்யப்படும் மனித உரிமை மீறல்களைகளையும் அப்பட்டமாக படமெடுக்க கூடிய இயக்குநர் வெற்றி மாறன். இவர் தற்போது ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

அதேபோல் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்துடன் வெற்றி மாறன் நல்ல தொடர்பில் இருக்கிறார். இதனால் அவரை தொடர்ந்து பணியாற்ற அந்த நிறுவனமும் ஆவலாக உள்ளது. இதனிடையே ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தரப்பில் நடிகர் அஜித் குமாருடன் 2 படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அஜித் குமார் லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. நடிகை த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழு தீவிரமாக் உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்கு பின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கவுள்ளார். அந்த இரு படங்களுக்கான கதை கேட்கும் பணிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக உள்ளது. அதில் ஒரு கதையை மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாகவும், இன்னொரு கதையை வெற்றி மாறன் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க சூர்யா, விஜய், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அஜித் குமாருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular