Wednesday, December 25, 2024
- Advertisement -
HomeEntertainmentசூப்பர் ஸ்டாருக்கு வில்லன் ஆகிறாரா உலகநாயகன்… இது எல்சியு கான்செப்ட் இல்லையாம்… லோகேஷ் வைத்திருக்கும் திட்டமே...

சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் ஆகிறாரா உலகநாயகன்… இது எல்சியு கான்செப்ட் இல்லையாம்… லோகேஷ் வைத்திருக்கும் திட்டமே வேற!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கே நான்கு திரைப்படங்களைக் கொடுத்து, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வங்கியில் ஊழியராக பணியாற்றிய அவர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு கிளம்பி வந்து குறும்படங்களை இயக்கி வந்தார். இப்படியான நேரத்தில், மாநகரத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜ் கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இயக்குனர், அடுத்தடுத்த முயற்சிகளால் பலராலும் பேசப்பட்டார்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜை ஊரே மெச்சிக் கொண்டாடிய திரைப்படம் எதுவென்றால் அது விக்ரம் தான். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம், வசூல் வேட்டையை நடத்தியது. தனது கைதி திரைப்படத்தையும், விக்ரமையும் போதைப் பொருளை தொடர்புபடுத்தி ஒரே நேர்கோட்டில் இணைத்த லோகேஷ் கனகராஜ், அதை விறுவிறுப்பாக சொல்லி அசத்தியிருந்தார். குறிப்பாக கிளைமாக்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்ட, படம் வேறு லெவலில் ரீச் ஆனது.

இப்போது தளபதி விஜயுடன் லியோ படத்தை லோகேஷ் எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படமும் கிட்டத்தட்ட எல் சி யு-வில் வருவது உறுதியாகி உள்ளது. அடுத்த மாதம் 19 ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கான வேலைகள் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளன. இந்தப் படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கடைசி நேரத்தில் ரஜினியின் செயலால் இயக்குனர் அதிர்ச்சியில் இருப்பதாகவும், இதனால் திரைப்படம் ட்ராக் செய்யப்படுவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் சிலர் பேசினர்.

- Advertisement -
Rolex Surya Lokesh Kanagaraj

இதெல்லாம் வதந்தி என்பது உறுதி செய்யும் வகையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ் – ரஜினி படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. தலைவரின் 171 வது திரைப்படமாக உருவாகும் இதில், அனிருத் இசையமைக்கிறார். இதன் அறிவிப்பிலேயே சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், திரைப்படம் நிச்சயம் ஆக்சன் ஜானரில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் உடனான கலந்துரையாடலின் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஹீரோ மற்றும் வில்லனுக்கு சரி சமமான முக்கியத்துவம் மிக்க திரைப்படத்தை எடுக்கிறீர்கள் என்றால் அதில் யாரை கதாநாயகனாக போடுவீர்கள் என்று மாணவர் ஒருவர் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த லோகேஷ், நிச்சயம் ஹீரோவாக ரஜினி சார்தான் இருப்பார் என்று கூறினார். வில்லனாக கமல் சாரை வைப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். இதனை வைரலாக்கி வரும் ரசிகர்கள், ரஜினியின் படத்தில் கமல் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.

Most Popular