Monday, December 2, 2024
- Advertisement -
HomeEntertainmentகண் பார்வை இல்லாதவராக ரஜினிகாந்த்.. வேட்டையன் படத்தில் இருந்து வெளியான சீக்ரெட்.. சம்பவம் செய்ய போகும்...

கண் பார்வை இல்லாதவராக ரஜினிகாந்த்.. வேட்டையன் படத்தில் இருந்து வெளியான சீக்ரெட்.. சம்பவம் செய்ய போகும் ஞானவேல்

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தரப்பில் தயாரிக்கும் இந்த படத்தின் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

- Advertisement -

அதேபோல் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபாட்டி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஜெயிலர் ஃபார்முலாவையே இந்த படத்திலும் ரஜினிகாந்த் பின்பற்றியதாகவே பார்க்கப்படுகிறது. பல்வேறு மொழி நடிகர்களை ஒப்பந்தம் செய்து பான் இந்தியா ஹிட் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

இதன்பின் ரஜினிகாந்த் – ஞானவேல் கூட்டணியின் படப்பிடிப்பு தூத்துக்குடி, கேரளா, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகர்கள் பங்கேற்றனர். அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை ரஜினிகாந்த் நேரடியாக வெளியிட்டது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் 171வது படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டது. இதிலும் வழக்கம் போல் சூப்பர் ஸ்டார் என்று அனிருத் பின்னணியில் கத்தி கொண்டிருக்க, ரஜினி ஸ்டைலாக கண்ணாடி மேல் கண்ணாடி அணிந்து மாஸ் காட்டினார்.

- Advertisement -

இதனிடையே காட்சியின் தொடக்கத்தில் புத்தகம் படிப்பது போல் காட்டப்பட்டிருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் ரஜினிகாந்த் கண் பார்வையற்றவராகவே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அனைத்து காட்சிகளிலும் கருப்பு கண்ணாடியுடன் ரஜினிகாந்த் தோன்றுவதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

Most Popular