Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentமன்மதன் வேலையை கமல் படத்திலேயே காட்டும் சிம்பு… இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இப்படி ஒரு திட்டம்...

மன்மதன் வேலையை கமல் படத்திலேயே காட்டும் சிம்பு… இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இப்படி ஒரு திட்டம் வச்சிருப்பாருனு தெரியாம போச்சே!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. முந்தைய படங்களான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சிம்புவிற்கு இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த படத்தை துல்கர்சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். சிலம்பரசனின் 48 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தபடம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த கதையானது நடிகர் ரஜினிகாந்திற்கு சொல்லப்பட்ட கதை என்றும் பல்வேறு காரணங்களால் அது நடக்காத நிலையில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாக சொல்லபடுகிறது.

இந்தப் படத்தின் பிளாஷ்பேக்கில் சிம்பு போர் வீரனாக நடிப்பதால, அதற்காக தற்போது நீண்ட தலைமுடியுடன் சிம்பு காட்சியளிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் லொகேஷன்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த பணிகள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தயாரிப்பாளரான கமல்ஹாசன், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிய தகவலாக படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வில்லன் வேடமும் சிம்புவுக்கு இருக்கிறதாம்.

- Advertisement -

மன்மதனுக்கு பிறகு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதால், உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular