Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் பிளஸ் விஜய் மிரட்டும் தளபதி 68… தெளிவாக ஸ்கெட்ச் போட்ட வெங்கட் பிரபு… இந்த...

விஜய் பிளஸ் விஜய் மிரட்டும் தளபதி 68… தெளிவாக ஸ்கெட்ச் போட்ட வெங்கட் பிரபு… இந்த முறை மிஸ்ஸே ஆவாதாம்!

வாரிசு படத்திற்கு பிறகு விஜய், அடுத்ததாக லியோ படத்தில் நடித்திருக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கான ஷூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் பகுதிகளில் நடைபெற்றது.

- Advertisement -

சமீபத்தில் பேட்ச் ஒர்க்கிற்காக படக்குழு காஷ்மீர் சென்றது. லியோ படத்தை செவன் ஸ்டார் நிறுவனம் மூலம் தயாரிக்கும் லலித் குமார், அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளிவீசி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அதன்படி முதலில் நா ரெடிதான் பாடல் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட இந்த பாடல், யு டியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதையடுத்து சஞ்சய் தத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில் அவர் ஆண்டனி தாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் அர்ஜுன் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு, அவர் ஹரால்டு தாஸ் எனும் ரோலில் நடிப்பதாக தெரிவித்தது. மூன்று ஹீரோக்களின் பிறந்தநாளன்று அப்டேட் கொடுத்த லலித் குமார், அடுத்ததாக டீசர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ வெளியாகும் நிலையில், படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. லியோவுக்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார்.

- Advertisement -
vijay

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. தளபதியின் 68வது திரைப்படமாக உருவாகும் இந்த காவியம், அரசியல் தொடர்பான படம் இல்லை என்றும், ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வகையில் உருவாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், தம்பியாக ஜெய்யும் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

தற்போது புதிய தகவலாக விஜய், இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. மாஸ் படத்தில் தந்தை – மகன் என இரண்டு சூர்யாவை ரசிகர்களுக்கு காட்சிபடுத்தி இருந்தார் வெங்கட் பிரபு. இதன்பிறகு தற்போது விஜய்யை வைத்து அவர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை கையில் எடுப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதே சமயம், மாஸ் படத்தை போல இது வந்து விடக்கூடாது என்றும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே லியோ படம் வெளியானதும், தளபதி 68 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular