Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெமினி மேன் + டைம் டிராவல்.. தளபதி விஜயின் GOAT திரைப்படத்தின் கான்செப்ட் இதுதான் போலயே.....

ஜெமினி மேன் + டைம் டிராவல்.. தளபதி விஜயின் GOAT திரைப்படத்தின் கான்செப்ட் இதுதான் போலயே.. வெங்கட் பிரபு செய்ய போகும் சம்பவம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முன்பாக பூஜையிலேயே நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்துகொண்டனர். நாயகி மீனாட்சி சவுத்ரி, ஸ்னேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், வைபவ் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.

- Advertisement -

அதேபோல் பிகில் படத்திற்கு பின் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜெர்மனி, நெதர்லாந்து, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தளபதி 68 படத்தின் கதை, லூப்பர் படத்தின் தழுவலாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய் முதுமை மற்றும் இளமை கதாபாத்திரத்தில் இருக்கிறார். அதேபோல் பைலட் சூட்டுடன் இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் GOAT படத்தின் கதை ஹாலிவுட்டில் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான ஜெமினி மேன் படத்தின் ஒன் லைன் வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு அசாத்திய செயல்களை செய்யும் வில் ஸ்மித்தை கொல்வதற்காக வில் ஸ்மித்தின் இளமை கால திறமைகளுடன் ஒருவரை உருவாக்கி உளவு நிறுவனம் பயன்படுத்தும்.

- Advertisement -

இந்த ஒன் லைனை வைத்து டைம் டிராவல் கான்செப்டை இணைத்து இயக்குநர் வெங்கட் பிரபு திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தை பார்த்த பின் வெங்கட் பிரவுவை அழைத்த நடிகர் விஜய், டைம் டிராவல் பாணியில் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் GOAT திரைப்படம் சையின்ஸ் மற்றும் டைம் டிராவல் ஜானரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular