Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainment”சில்லுனு ஒரு காதல்” சூர்யா படத்தில் நடிக்க மறுத்த அசின்..  கடைசி நேரத்தில் வந்த பூமிகா.....

”சில்லுனு ஒரு காதல்” சூர்யா படத்தில் நடிக்க மறுத்த அசின்..  கடைசி நேரத்தில் வந்த பூமிகா.. காரணத்தை உடைத்த படக்குழு

சூர்யா – ஜோதிகா திருமணத்திற்கு முன் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்தப் படம் குறித்து புதிய தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் போக்கிரி, காதலன், தசாவதாரம், சிவகாசி, வரலாறு, ஆழ்வார் என்று உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டவர் அசின்.

- Advertisement -

கஜினி கல்பனா கதாபாத்திரம்

கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவே வாரி அணைத்து கொண்டது. அதற்கு முழூமையான காரணமும் அவர் சூர்யாவுடன் நடித்த கஜினி திரைப்படம் தான். கஜினி திரைப்படத்தின் கல்பனா கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இப்போதும் சஞ்சய் ராமசாமி – கல்பனா சேர்ந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கலங்குவார்கள்.

பாலிவுட் சென்ற அசின்

அதன்பின் சூர்யாவுடன் இணைந்து வேல் படத்தில் நடித்தார். தொடர்ந்து பாலிவுட் சென்ற அசின், ஆமீர் கான், சல்மான் கான், அக்சய் குமார் என்று உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார். பின்னர் மைக்ரோமேக்ஸ் உரிமையாளரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்டார். பெண் குழந்தைக்கு தாயான அவர், சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார்.

- Advertisement -

இவருக்கு சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அந்தப் படத்தில் சூர்யாவின் கல்லூரி காதலியாக நடிக்க அசினையே முதலில் படக்குழு அணுகியுள்ளது. ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு முதலில் ஓகே சொல்லிய அசின், முழுக் கதையையும் கேட்டுவிட்டு கூடுதல் காட்சிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

- Advertisement -

கடைசி நேரத்தில் விலகிய அசின்

அதேபோல் டூயப் பாடலையும் இணைக்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கு சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் என்று யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து விலகுவதால அசின் நேரடியாக கூறிவிட்டாராம். கடைசி படப்பிடிப்பு நாட்கள் முடிவான நிலையில், அசின் விலகியதால் என்ன செய்வதென்று படக்குழு திணறியுள்ளது.

அந்த நேரத்தில் படக்குழு தரப்பில் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த பூமிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த பூமிகா, லைஃப் டைம் கதாபாத்திரமாக அந்த கதாபாத்திரம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular