Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜயின் ராசிக்கு அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் ஜோதிடர்கள் விளக்கம்

விஜயின் ராசிக்கு அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் ஜோதிடர்கள் விளக்கம்

அரசியல் கட்சி துவங்கியிருக்கும் தளபதி விஜய் பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வரும் இந்நிலையில் ஜோதிடர்கள் அவர் கட்சி தொடங்கி இருக்கும் நேரத்தைப் பற்றியும் அது செல்லப் போகும் இடத்தைப் பற்றியும் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

தளபதி விஜய் கடக ராசி பூச நட்சத்திரம் ஆவார் .இந்த ராசிக்கு தற்பொழுது நீச்ச பங்க ராஜ யோகம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள். இவருடைய ராசிக்கு சந்திரனுடன் செவ்வாய் அமர்ந்திருக்கிறதாம் நீச்சம் பெற்று செவ்வாயுடன் சந்திரன் இருப்பதால் தைப்பூசத்தன்று தன்னுடைய கட்சிப் பெயரை நடிகர் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட யோகம் இருப்பவர்களுக்கு திடீரென்று தான் அரசியல் யோகம் தேடி வரும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

அவர் தன்னுடைய அரசியல் பெயரை அறிவித்தது அஸ்தமத்து சனி காலத்தில் என்றும் கூறி இருக்கிறார்கள். தளபதி விஜயின் ராசி லக்கணப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கிறதாம் .விஜய் அரசியல்வாதியாக முழுமை அடைய இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் என்றும் கூறியிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.

- Advertisement -

இப்படி சரியான நேரத்தில் தன்னுடைய கட்சி பயணத்தை தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய் என்று பாசிட்டிவான விஷயங்களை கூறி இருக்கிறார்கள் ஜோதிடர்கள் .

விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கும் இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டிருப்பது அவருடைய ஆதரவாளர்களுக்கு நன்மை அளித்திருக்கிறது.

Most Popular