Entertainment

ஏகே 63 –  விஜய் இயக்குனருடன் கைக்கோர்க்கும் அஜித்.. மாஸ் அப்டேட் உறுதி

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படம் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார். இதுவரை வெளிவந்த அஜித் திரைப்படத்தில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை துணிவு பெற்று இருக்கிறது. இது நடிகர் அஜித்துக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக பல்வேறு அப்டேட்களை அஜித் வழங்க உள்ளார்.

Advertisement

தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்துள்ள அவர் அடுத்ததாக யாருமே எதிர்பாராத ஒரு இயக்குனருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். நடிகர் விஜய் வைத்து தெறி ,மெர்சல், பிகில் போன்ற ஹாட்ரிக் மெகா ஹிட் படங்களை கொடுத்திருந்த இயக்குனர் அட்லியுடன் நடிகர் அஜித் தனது 63வது படத்தை நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட உள்ளது .100 சதவீத வெற்றியை கொடுத்து வரும் அட்லி தற்போது ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து தளபதி 68 படத்தை அட்லீயுடன் எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அஜித்துடன் அட்லீ கை கோர்க்க உள்ளதாக உள்ளதால், முதலில் எந்த படம் வரும் என்ற சரியான தகவல் வெளிவரவில்லை. நடிகர் அஜித் ஏகே 62 படத்துக்குப் பிறகு சின்ன பிரேக் எடுக்க உள்ளதாக தெரிகிறது.

Advertisement

அந்த இடைவெளியில் விஜய் படம் முடித்துவிட்டு அதன் பிறகு அஜித் படத்தை அட்லீ தொடங்க உள்ளதாக முதல் கட்ட தகவல் கூறப்படுகிறது. இரண்டு துருவங்களும் இணைந்து இருப்பது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இணையதளம் என்ன கதிக்கு ஆகப் போகிறது என்று நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top