Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentபாலிவுட்டில் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் அட்லி… முதலாவதாக தெறி படத்தை தயாரிக்க திட்டம்… வருண் தவான்...

பாலிவுட்டில் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் அட்லி… முதலாவதாக தெறி படத்தை தயாரிக்க திட்டம்… வருண் தவான் நடிக்கும் படத்திற்கு இயக்குனர் யார் தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த அட்லிக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் தெறி. அப்படமும் வேறலெவல் ஹிட் அடித்ததால், தன்னுடைய மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு கொடுத்தார் விஜய்.

- Advertisement -

விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி, அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நடிகர் ஷாருக்கான் உடன் கூட்டணி அமைத்துள்ள அட்லி, அவர் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஷாருக்கானின் மனைவி கெளரிகான் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜவான் படத்தில் பிசியாக இருக்கும் இயக்குனர் அட்லிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் மீர் என பெயரிட்டுள்ளதாக ஷாருக்கான் அண்மையில் அறிவித்தார். மகன் பிறந்துள்ள இந்த சமயத்தில் இயக்குனர் அட்லி மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு சொகுசு பங்களா ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

- Advertisement -

மும்பையில் அட்லி வாங்கி உள்ள பங்களாவின் மதிப்பு ரூ.38 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஜவான் படத்துக்கு பின்னர் அட்லீக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், அதன் காரணமாகவே அவர் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது அட்லி பாலிவுட் படத்தை தயாரிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

விஜய்யுடன் அவர் முதலில் சேர்ந்த தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், வருண் தவான் நடிக்கும் இந்த படத்தை அட்லியே தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Most Popular